சுப்மன் கில் இல்லை... அஸ்வின், இஷான் கிஷனுக்கு அணியில் இடம்; முதலில் பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலிய அணி !! 1
சுப்மன் கில் இல்லை… அஸ்வின், இஷான் கிஷனுக்கு அணியில் இடம்; முதலில் பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலிய அணி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கியது.

மொத்தம் 48 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த தொடரின் ஐந்தாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

சுப்மன் கில் இல்லை... அஸ்வின், இஷான் கிஷனுக்கு அணியில் இடம்; முதலில் பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலிய அணி !! 2

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

காய்ச்சலில் இருந்து சுப்மன் கில் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டிக்கான ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. இதனால் அவருக்கு பதிலாக ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ள இஷான் கிஷன், ரோஹித் சர்மாவுடன் இணைந்து இந்திய அணிக்கு துவக்க வீரராகவும் களமிறங்க உள்ளார்.

சுப்மன் கில் இல்லை... அஸ்வின், இஷான் கிஷனுக்கு அணியில் இடம்; முதலில் பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலிய அணி !! 3

அதே போன்று இந்திய அணியின் ஆடும் லெவனில் சீனியர் வீரரான ரவிச்சந்திர அஸ்வினுக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மிடில் ஆர்டரில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளதால், சூர்யகுமார் யாதவிற்கு இந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ் மற்றும் பும்ராஹ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்களான ஸ்டோய்னிஸ், அபாட், டர்வீஸ் ஹெட், ஜாஸ் இங்லீஸ் போன்ற வீரர்களும், இந்திய அணியுடனான இந்த போட்டிக்கான ஆடும் லெவனில் இடம்பெறவில்லை.

இந்திய அணியின் ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், பும்ராஹ், முகமது சிராஜ்.

ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன்;

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசேன், கேமிரான் க்ரீன், அலெக்ஸ் கேரி, கிளன் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜாஸ் ஹசில்வுட், ஆடம் ஜாம்பா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *