ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்..?
ஆசிய கணடத்தின் கிரிக்கெட் வல்லரசை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் இந்திய அணியும், வங்கதேச அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இரு அணிகள் இடையேயான இறுதி போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன ஆசிய கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ள அணி எது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
நாள்; 28/08/2018
போட்டி நேரம்; மாலை 5 மணி
இடம்; துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
உத்தேச இந்திய அணி;
ஷிகர் தவான், ரோஹித் சர்மா,அம்பத்தி ராயூடு, தினேஷ் கார்த்திக், தோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ராஹ்.

உத்தேச வங்கதேச அணி;
லிடன் தாஸ், சவுமியா சர்கார், முஸ்மினுல் ஹக், முஸ்தபிசுர் ரஹிம், முகமது மிதுன், இம்ருல் கயீஸ், மஹ்மதுல்லாஹ், மோர்டசா, மெஹ்தி ஹசன், ரூபல் ஹுசைன், முஸ்தபிசுர் ரஹ்மான்.
கோப்பை யாருக்கு..?
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் தேவையான பலம் பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வெல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதே வேளையில் வங்கதேச அணியையும் குறைத்து எடை போட்டுவிட முடியாது, இதே அணி தான் சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு டி.20 தொடரின் இறுதி போட்டியில் இதே ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை தோல்வியின் விளிம்பு வரை அழைத்து சென்றதை மறந்துவிட முடியாது, கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி ஒரு காட்டு காட்டியதால் மட்டுமே இந்திய அணியால் முத்தரப்பு தொடரை வெல்ல முடிந்தது. இந்த தொடரில் பட்ட அசிங்கத்திற்கு வங்கதேச அணி பழீ தீர்க்க காத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.