எங்களுக்கு முன்னாடி இந்தியா அடிவாங்குனத வச்சு... ஆஸ்திரேலியாவிடம் என்ன செய்யணும்? செய்யக்கூடாதுன்னு தெரிஞ்சிருச்சு! - பென் ஸ்டோக்ஸ் நக்கல் பேட்டி! 1

இந்திய அணி குறிப்பிட்ட வீரர்களை விக்கெட் எடுப்பதற்கு சில பவுலர்களை பயன்படுத்துவார்கள். அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை நான் ஆஷஸ் தொடரில் செயல்படுத்தப்போகிறேன் என்கிறவாறு பேட்டி அளித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலை வென்று கோப்பையை வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி உடனடியாக இங்கிலாந்திலேயே தங்கி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளும் எதற்காக தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

எங்களுக்கு முன்னாடி இந்தியா அடிவாங்குனத வச்சு... ஆஸ்திரேலியாவிடம் என்ன செய்யணும்? செய்யக்கூடாதுன்னு தெரிஞ்சிருச்சு! - பென் ஸ்டோக்ஸ் நக்கல் பேட்டி! 2

கடந்த முறை ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திற்கு வந்து ஆஷஸ் தொடரில் விளையாடியபோது 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது. இது இங்கிலாந்து அணிக்கு சற்று அவமானம் என பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து இருக்கின்றனர்.

இந்நிலையில் இம்முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்புடன் இங்கிலாந்து வீரர்கள் இருக்கின்றனர். பென் ஸ்டோக்ஸ் தலைமையேற்ற பிறகு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறை அதிரடியாக இருந்து வருகிறது. குறிப்பாக பயிற்சியாளர் பிரண்டன் மேக்கல்லம் “தடுத்து ஆடுவதை விட எதிரடி கொடுத்து விளையாட வேண்டும்.” என்கிற பாணியில் பயணித்து வருகிறார்.

எங்களுக்கு முன்னாடி இந்தியா அடிவாங்குனத வச்சு... ஆஸ்திரேலியாவிடம் என்ன செய்யணும்? செய்யக்கூடாதுன்னு தெரிஞ்சிருச்சு! - பென் ஸ்டோக்ஸ் நக்கல் பேட்டி! 3

ஆகையால் இத்தகைய புதிய இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி எப்படி சமாளிக்கும்? என்கிற பேச்சுக்களும் விலகி வருகின்றன. இப்படி ஒரு சூழலில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடியபோது பயன்படுத்திய சில நுணுக்கங்களை நான் ஆஷஸ் தொடரில் பயன்படுத்தப் போகிறேன் என சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

“இந்திய அணி எனது விக்கெட்டை எடுப்பதற்கு அஸ்வின் பந்துவீச்சை அடிக்கடி பயன்படுத்துவார்கள். அதுபோல வார்னர் விக்கெட்டை எடுப்பதற்கு நான் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சை பயன்படுத்தப் போகிறேன். அதற்காக தான் அவரை உள்ளே எடுத்து வந்திருக்கிறேன். இப்படிப்பட்ட அணுகுமுறையை இந்திய அணியிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.

எங்களுக்கு முன்னாடி இந்தியா அடிவாங்குனத வச்சு... ஆஸ்திரேலியாவிடம் என்ன செய்யணும்? செய்யக்கூடாதுன்னு தெரிஞ்சிருச்சு! - பென் ஸ்டோக்ஸ் நக்கல் பேட்டி! 4

மேலும் ஆஸ்திரேலியா அணி பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை இந்திய அணிக்கு எதிராக விளையாடிய போட்டியின்போது சிலவற்றை புரிந்து கொள்ள முடிந்தது. அதையும் முடிந்தவரை பயன்படுத்திக் கொள்கிறேன்.” என பேசியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *