மதீஷா பதிரானா
மதீஷா பதிரானா
இருந்த ஒரு நம்பிக்கையும் போச்சு… நாடு திரும்பும் மதீஷா பதிரானா; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவரான மதீஷா பதிரானா காயம் காரணமாக நாடு திரும்பிவிட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு தொடரின் முதல் போட்டியிலும் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை துவங்கியது.

கடந்த தொடரை விட பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலும் வலுவான அணியாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடரில் இதுவரை விளையாடியுள்ள 11 போட்டியில் 5 போட்டியில் மட்டுமே வெற்றியை சந்தித்துள்ளது. மற்ற போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

இருந்த ஒரு நம்பிக்கையும் போச்சு... நாடு திரும்பும் மதீஷா பதிரானா; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 1

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ளே ஆஃப் சுற்றும் இதுவரை உறுதியாகமலே உள்ளது. 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கிய வீரராக திகழ்ந்து வந்த வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா காயம் காரணமாக இலங்கை திரும்பிவிட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மதீஷா பதிரானா இலங்கை திரும்பியுள்ளதாக அறிவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவர் விரைவாக காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளது. அதே வேளையில் பதிரானா நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகிவிட்டரா இல்லை, ஒருவேளை சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால் பதிரானா மீண்டும் சென்னை அணியில் இணைவாரா என்ற தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவிக்கவில்லை.

இருந்த ஒரு நம்பிக்கையும் போச்சு... நாடு திரும்பும் மதீஷா பதிரானா; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் !! 2

ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாக போராடி வரும் நிலையில், மதீஷா பதிரானா நாடு திரும்பியுள்ளது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முன்னதாக சென்னை அணியின் மற்றொரு முக்கிய பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மானும் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்காக நாடு  திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *