பல மாதங்களுக்கு பிறகு டி20 போட்டிக்கான அணிக்கு திரும்பும் முன்னாள் கேப்டன் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! 1

பல மாதங்களுக்கு பிறகு டி20 அணிக்கு திரும்பும் முன்னாள் கேப்டன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு டி20 போட்டிக்கான அணியில் முன்னாள் கேப்டன் இடம்பிடித்ததால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜனவரி 5-ஆம் தேதி துவங்குகிறது. இந்தத் தொடருக்கு லசித் மலிங்கா தலைமையிலான 16 பேர் கொண்ட இலங்கை அணி 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

பல மாதங்களுக்கு பிறகு டி20 போட்டிக்கான அணிக்கு திரும்பும் முன்னாள் கேப்டன் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! 2

கடந்த 16 மாதங்களாக டி20 போட்டிக்கான அணியில் மோசமான பார்ம் காரணமாக முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ் இடம்பெறாமல் இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் கடைசியாக ஆகஸ்ட் 2018-இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கையை அணியை வழிநடத்தி வெற்றி பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் டி20 அணியில் அனுபவம் மிக்க மூத்த வீரர் மற்றும் முன்னாள் கேப்டனை சேர்த்ததற்கு இலங்கை ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பை வரவிருப்பதால் இவரின் இணைப்பு அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் எனவும் கணிக்கப்படுகிறது.

பல மாதங்களுக்கு பிறகு டி20 போட்டிக்கான அணிக்கு திரும்பும் முன்னாள் கேப்டன் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! 3

இந்தியாவுடனான டி20 தொடருக்கு 16 பேர் கொண்ட இலங்கை அணி:

லசித் மலிங்கா (கேப்டன்), தனுஷ்கா குணத்திலகா, அவிஷ்கா பெர்ணான்டோ, ஆஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனாகா, குசால் பெரேரா, நிரோஷன் டிக்வெலா (கீப்பர்), தனஞ்ஜெய டி சில்வா, இசுரு உடானா, பனுகா ராஜபட்ச, ஓஷாடா பெர்ணான்டோ, வானிந்து ஹசரங்கா, லஹிரு குமாரா, குசால் மெண்டீஸ், லக்ஷன் சண்டாக்கன் மற்றும் கசுன் ரஜிதா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *