எனக்கு சவலாக இருந்த ஒரே பந்துவீச்சாளர் இவர் தான்; மேத்யூ ஹைடன் ஓபன் டாக் !! 1
எனக்கு சவலாக இருந்த ஒரே பந்துவீச்சாளர் இவர் தான்; மேத்யூ ஹைடன் ஓபன் டாக்

தான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் தனக்கு சவாலாக இருந்த பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான்களில் மிக முக்கியமானவருமான மேத்யூ ஹைடன், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார்.

எனக்கு சவலாக இருந்த ஒரே பந்துவீச்சாளர் இவர் தான்; மேத்யூ ஹைடன் ஓபன் டாக் !! 2

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூலம் தமிழத்தில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்ததால், ஹைடன் ஓய்வு பெற்றப்பிறகும் அவரை விடாத ஐ.பி.எல் நிர்வாகம் அவரை விளம்பரத்திற்கும், கமெண்ட்ரிக்கும் பயன்படுத்தி வருகின்றது.

இது தவிர தமிழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரை பிரபலப்படுத்தும் வேலையிலும் ஹைடனும், பிரட் லீயும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேத்யூ ஹைடன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் தனக்கு சவாலாக இருந்த பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து ஓபனாக தெரிவித்துள்ளார்.

எனக்கு சவலாக இருந்த ஒரே பந்துவீச்சாளர் இவர் தான்; மேத்யூ ஹைடன் ஓபன் டாக் !! 3

இது குறித்து மேத்யூ ஹைடன் கூறியதாவது, “நான் விளையாடிய காலத்தில் எனக்கு கடும் சவாலாக இருந்தது கர்ட்லி ஆம்ரோஸ் தான். நிச்சயமாக அவர் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர். மிக துல்லியமாக அவர் வீசும் பந்துகளை எதிர்கொள்வது கடும் சவலாக இருக்கும். இந்திய வீரர்களை பொருத்தவரையில் ஹர்பஜன் சிங்கிற்கும் எனக்கும் கடுமையான போட்டி நிலவும். நிறைய போட்டிகளில் நாங்கள் இருவருமே ஆக்ரோஷமாக விளையாடியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் பேட்ஸ்மேன்களில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரிக்கி பாண்டிங்கும், விண்டீஸ் வீரரான பிரைன் லாராவும் தனக்கு பிடித்தமான பேட்ஸ்மேன்கள் என்று ஹைடன் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *