2021 ஐபிஎல் போட்டியில் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடிக்கும்;வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ஸ்காட் ஸ்டரீஸ்!! 1

இந்தியாவில் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் நடைபெற இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. 

இந்த போட்டியில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது.

2021 ஐபிஎல் போட்டியில் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடிக்கும்;வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ஸ்காட் ஸ்டரீஸ்!! 2

இதுவரை ஒரு முறை கோப்பையை வெல்ல பஞ்சாப் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடல் எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டுமென்று பல திட்டங்களையும் யுக்திகளை வகுத்துக் கொண்டு உள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் யார் வெல்வார் எந்த அணி சிறப்பாக செயல்படும் எந்த அணி விளையாட்டுக்கு கூட முன்னேறாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் இடத்தில் பேசு பொருளாக உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட்டி ஸ்டைரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் 2021 ஐபிஎல் போட்டியின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

2021 ஐபிஎல் போட்டியில் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடிக்கும்;வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ஸ்காட் ஸ்டரீஸ்!! 3

அதில் முதலிடத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இடம் பெற்றுள்ளது, ஏற்கனவே 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றி பெறும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் தெரிவித்துள்ள நிலையில் தனது கருத்தை ஸ்காட் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் 2ஆம் இடத்தில் டெல்லி கேப்பிடல் அணியும், 3ஆம் இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியையும் பட்டியலிட்ட இவர் பஞ்சாப் கிங்ஸ் அணி சிறந்த முறையில் ஏலம் செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4-வது இடத்திலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 5-வது இடத்திலும் ராஜஸ்தான் ராயல்ஸ் 6வது இடத்திலும் பட்டியலிட்டுள்ளார். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மோரிஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது உடற் தகுதியை நிரூபித்து விட்டால் ஒருவேளை முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.மேலும் 8 ஆவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை குறிப்பிட்டிருந்த இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்து இருந்தார். இறுதியாக சென்னை அணியை பட்டியலிட்டு இருந்தார்.

இந்நிலையில் இவர் சென்னை அணியை 8வது இடத்தில் ஏன் பட்டியலிட்டிருக்கிறார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் ஒருவர் சென்னை அணி வயதான வீரர்கள் இருப்பதால் நீங்கள் இவ்வாறு செய்தீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *