தொடர்ந்து 5 வெற்றியுடன் திமிராக இருந்த மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி.... கர்வத்தை அடக்கி வீழ்த்திய யுபி வாரியர்ஸ் அணி.. மும்பைக்கு முதல் தோல்வி - குவியும் பாராட்டுக்கள்! 1

தொடர்ந்து 5 வெற்றிகள் பெற்று கம்பீரமாக 6வது போட்டியில் களமிறங்கிய  மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி கர்வத்தை அடக்கியது வாரியர்ஸ் அணி.

பெண்கள் பிரிமியர் லீக் அறிமுக தொடரில் லீக் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 5 போட்டிகள் விளையாடி, 5 போட்டியையும் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, ஆறாவது போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணிக்காக ஓபனிங் செய்த ஹைலி மேத்யூஸ் மற்றும் யாஷிகா பாட்டியா இருவரில், யாஷிகா பாட்டியா 7 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ஹைலி அபாரமாக விளையாடி 35 ரன்கள் அடித்தார். அடுத்ததாக உள்ளே வந்த கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 25 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து 5 வெற்றியுடன் திமிராக இருந்த மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி.... கர்வத்தை அடக்கி வீழ்த்திய யுபி வாரியர்ஸ் அணி.. மும்பைக்கு முதல் தோல்வி - குவியும் பாராட்டுக்கள்! 2

கீழ் வரிசையில் அதிரடியாக விளையாடி வந்த வாங் 19 பந்துகளில் 32 ரன்கள் அடித்திருந்தபோது துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இந்த தருணத்தில் ஆட்டம் யுபி வாரியர்ஸ் அணியின் பக்கம் திரும்பியது. அதற்கு அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க, மும்பை பெண்கள் அணி  20 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

சற்று எளிய இலக்கை துரத்திய யுபி வாரியர்ஸ் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. தேவிகா(1), அலிசா ஹெலி(8) மற்றும் கிரண்(12) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். 27 ரன்களுக்கு மூன்று விக்கெடுகள் இழந்து மிகவும் தடுமாறியது. பின்னர் வந்த தாலியா மெக்ரத் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் இருவரும் ஜோடி சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்தனர்.

தொடர்ந்து 5 வெற்றியுடன் திமிராக இருந்த மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி.... கர்வத்தை அடக்கி வீழ்த்திய யுபி வாரியர்ஸ் அணி.. மும்பைக்கு முதல் தோல்வி - குவியும் பாராட்டுக்கள்! 3

தாலியா மெக்ரத் 38 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.அதன் பிறகு பார்ட்னர்ஷிப் அமைத்த தீப்தி ஷர்மா மற்றும் எக்லெஸ்டோன் இருவரும் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். கடைசி இரண்டு ஓவர்களில் 13 ரன்கள் தேவைப்பட்ட திக்திக் நிமிடங்களில் எக்லெஸ்டோன் அபாரமாக விளையாடி வெற்றிற்கு முக்கிய பங்காற்றினர். 

இவர் பேட்டிங்கில் முக்கியமான கட்டத்தில் 16 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் நான்கு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகள் என ஆல்ரவுண்டர் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். யுபி வாரியர்ஸ் அணி 19.3 ஓவர்களில் 129 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து 5 வெற்றியுடன் திமிராக இருந்த மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி.... கர்வத்தை அடக்கி வீழ்த்திய யுபி வாரியர்ஸ் அணி.. மும்பைக்கு முதல் தோல்வி - குவியும் பாராட்டுக்கள்! 4

லீக் சுற்றில் தொடர்ந்து ஐந்து வெற்றிகளை பெற்ற மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி முதல் முறையாக தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் யுபி வாரியர்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி தொடர்ந்து பத்து புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *