எப்போவுமே கோஹ்லி கில்லி தான்.. கிளார்க் புகழாரம்
சர்வதேச ஒருநாள் அரங்கை பொறுத்தவரையில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி எப்பொழுதும் தலை சிறந்த வீரர் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிளார்க் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்த நிலையில், இரு அணிகள் இடையேயான ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் இதுவரை முடிந்துள்ள முதல் மூன்று போட்டிகளிலும் கெத்து காட்டிய கோஹ்லி, இரண்டு சதமும், ஒரு அரைசதமும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
டெஸ்ட் போட்டிகளில் சொதப்பினாலும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மாஸ் காட்டி வரும் கோஹ்லியை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். முன்னாள் வீரரகள் மற்றும் இந்நாள் வீரர்கள் என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பாராட்டு மழையில் நனைந்து வரும் கோஹ்லியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிளார்க்கும் தனது பங்கிற்கு பாராட்டியுள்ளார்.
கோஹ்லி குறித்தான ஒரு செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கிளார்க் அதில், ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி எப்பொழுதும் சிறந்த வீரர் என்று பதிவிட்டுள்ளார்.