இனி இந்திய அணி வெற்றி பெற வேண்டுமானால் இதை செய்ய வேண்டும் ! இந்தியாவிற்கே டிப்ஸ் கொடுக்கும் மைக்கேல் வாகன் !
இந்திய அணிஆஸ்திரேலியாவிற்கு எதிராக மீதமுள்ள போட்டிகளில் வெற்றிபெற வேண்டுமென்றால் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும். ஆஸ்திரேலிய அணியை திருப்பி அடிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி படுமோசமாக தோல்வி அடைந்தது. இரண்டு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 374 ரன்களும் 389 ரன்களும் குவித்தது. இரண்டு போட்டிகளிலும் 100+ ரன்கள் வித்தியாசத்தில் தங்களது வெற்றியை பதிவு செய்தனர். அதன் பின்னர் மூன்றாவது போட்டியில் தட்டுத்தடுமாறி இந்திய அணி வெற்றி பெற்றது.
முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய பந்துவீச்சாளர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கியதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு கூடுதல் பந்துவீச்சாளர்கள் தேவை என்று இந்திய வீரர்கள் கூறிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால் ஆக்ரோசமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில் “ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரின் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது. இருவருமே நேரத்திற்கு தகுந்தாற்போல் விளையாடினார்கள்.
முன்னர் இருந்தது போல் இந்திய அணியில் ஒரு வீரரும் கட்டுப்படுத்துவதில்லை. அனைவரும் தங்களுக்கு ஏற்றாற்போல் விளையாடுகின்றனர். அதேநேரத்தில் இந்திய அணியில் திறமை வாய்ந்த பல வீரர்கள் இருக்கின்றனர். ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கான திறமையும் தகுதியும் அவர்களிடம் இருக்கிறது.

அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறவேண்டுமென்றால் ஆக்ரோசமாக அடித்து ஆடி வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலிய அணியை திருப்பி அடிக்காவிட்டால் அந்த அணியை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது. ஹர்திக் பாண்டியா மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோரின் ஆட்டம் அதற்குச் சான்று. எப்போது நீங்கள் திருப்பி அடிக்கிறீர்களோ அப்போது தான் வெற்றி பெற முடியும்” என்று தெரிவித்திருக்கிறார். தற்போது டி20 தொடரின் நடைபெற்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.