ஒயிட் பால் போட்டியில் சிறந்த கேப்டன் யார்?, மனம் திறந்த மைக்கேல் வான்!! 1

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நினைப்பில் ஒயிட் பால் தொடரில் மிக சிறந்த கேப்டன் யார் என்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஒரு அணி வெற்றி பெறுவதற்கு நிச்சயம் அந்த அணியின் கேப்டன் மிகச்சிறந்த வீரராக இருப்பது முக்கியம் ஏனென்றால் அணியை வழி நடத்தவும் எந்த நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அவர் நன்கு தெரிந்து வைத்திருப்பார், மேலும் பீல்டர்கள் செட் செய்வதிலும் வீரர்களின் நிலைமை அறிந்து அவர்களுக்கு உற்சாகப்படுத்துவது எனும் மிக சிறப்பாக செயல்படுவார்.இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் நான் இதுவரை கண்ட கேப்டன்களிலேயே மகேந்திர சிங் தோனி தான் மிக சிறந்த கேப்டன் என்று தெரிவித்துள்ளார்.

ஒயிட் பால் போட்டியில் சிறந்த கேப்டன் யார்?, மனம் திறந்த மைக்கேல் வான்!! 2

இதுபற்றி அவர் கூறியதாவது,மகேந்திர சிங் தோனி ஒரு மிகச்சிறந்த கேப்டன் சர்வதேச போட்டிகளிலும் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் பலமுறை தனது அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்,மேலும் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மற்றும் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பற்றி கூறிய அவர் இருவருமே மிக சிறந்த கேப்டன்கல்தான் ஆனால் அவர்களால் தோனி போன்று வர முடியாது என்று தெரிவித்தார்.குறிப்பாக கேன் வில்லியம்சன் மிகவும் பொறுமையாக நிலைமையை கையாண்டு தனது அணிக்கு வெற்றியை தேடி கொடுப்பார் என்று அவரைப் பாராட்டினார்

மேலும் தோனி பற்றி அவர் தெரிவித்ததாவது, தோனி மிகச் சிறந்த கேப்டன் இவர் இக்கட்டான நிலையிலும் மிக சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெறச் செய்வார்.

மேலும் மைக்கல் வான் தற்பொழுதைய இந்திய அணி கேப்டன் விராட் கோலி குறித்து கூறியதாவது,விராட் கோலி ஒரு மிகச் சிறந்த கேப்டன். இவரின் அபாரமான பேட்டிங் இவருடைய கேப்டன்சிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கிறது, மேலும் இவரது கேப்டன்சிப்பை நான் பெரிதும் ரசிப்பேன் என்று தெரிவித்தார்.

ஒயிட் பால் போட்டியில் சிறந்த கேப்டன் யார்?, மனம் திறந்த மைக்கேல் வான்!! 3

மகேந்திர சிங் தோனி 2007 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை சாம்பியன்ஸ் டிராபி மற்றும் மூன்று ஐபிஎல் கோப்பையை தனது அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *