உலகக்கோப்பையில் மாஸ் காட்ட போவது இவர் தான்; மிஸ்பாஹ் உல் ஹக் ஓபன் டாக் !! 1

உலகக்கோப்பையில் மாஸ் காட்ட போவது இவர் தான்; மிஸ்பாஹ் உல் ஹக் ஓபன் டாக்

இந்த உலக கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜோஸ் பட்லர், டேவிட் வார்னர், வில்லியம்சன், ஸ்மித், பேர்ஸ்டோ, டி காக், ஷாய் ஹோப், பாபர் அசாம் என பல சிறந்த வீரர்கள் ஆடுகின்றனர். பவுலர்களை பொறுத்தமட்டில் பும்ரா, ஆர்ச்சர், ரஷீத் கான், ரபாடா ஆகியோரின் மீது அதிக கவனம் உள்ளது.

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

நிறைய சிறந்த வீரர்கள் ஆடினாலும் பெரும்பாலான முன்னாள் வீரர்கள், விராட் கோலி, பட்லர், பேர்ஸ்டோ, வார்னர் ஆகிய பேட்ஸ்மேன்கள் தான் இந்த தொடரில் ஜொலிக்கப்போவதாக எதிர்பார்க்கின்றனர். இவர்களில் ஒருவரின் பெயரைத்தான் குறிப்பிடுகின்றனர். பவுலர்களை பொறுத்தமட்டில் பும்ரா, ரபாடா, ஆர்ச்சர், ரஷீத் கான் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், இந்த உலக கோப்பை தொடர் முழுதும் ஜொலிக்கப்போவது இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் தான் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார். ஜேசன் ராய் இருக்கிற ஃபார்முக்கு அவர்தான் உலக கோப்பை தொடர் முழுவதும் அசத்தப்போகிறார் என மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பையில் மாஸ் காட்ட போவது இவர் தான்; மிஸ்பாஹ் உல் ஹக் ஓபன் டாக் !! 2

அனைவரின் பார்வையும் பட்லர், பேர்ஸ்டோ மீதே இருக்கும் நிலையில், மிஸ்பா உல் ஹக் கூறியிருப்பது சரிதான். ஜேசன் ராய், உலக கோப்பைக்கு முன்பாக கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த தொடர், பயிற்சி போட்டிகள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டி என தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருகிறார். நல்ல ஃபார்மில் இருக்கும் அவர், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆடிவருகிறார். ஆனால் அவர் மீது யாருடைய கவனமும் இல்லை. எனினும் சைலண்ட்டாக மிரட்டிவருகிறார். மிஸ்பா உல் ஹக்கின் பார்வை சரியானதுதான்.

உலகக்கோப்பையில் மாஸ் காட்ட போவது இவர் தான்; மிஸ்பாஹ் உல் ஹக் ஓபன் டாக் !! 3

உலக கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த தொடரின் இரண்டாவது போட்டியில் 87 ரன்களையும் மூன்றாவது போட்டியில் 76 ரன்களையும் குவித்த ராய், நான்காவது போட்டியில் சதமடித்து அசத்தினார். கடைசி போட்டியில் ஆடவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலும் ராய் அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *