பாட் கம்மின்ஸை ஓரங்கட்டிய மிட்செல் ஸ்டார்க்... கோடிகளை கொட்டி ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  !! 1
பாட் கம்மின்ஸை ஓரங்கட்டிய மிட்செல் ஸ்டார்க்… கோடிகளை கொட்டி ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான மிட்செல் ஸ்டார்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

17வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 333 வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸை கடும் போட்டிக்கு பிறகு 20.50 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. 16 வருட ஐபிஎல் வரலாற்றில் 20 கோடிகளுக்கு ஏலம் போன வீரர்களில் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த நிலையில், பாட் கம்மின்ஸ் ஏலம் போன அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸையே பின்னுக்கு தள்ளி வரலாறு படைத்துள்ளார்.

பாட் கம்மின்ஸை ஓரங்கட்டிய மிட்செல் ஸ்டார்க்... கோடிகளை கொட்டி ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  !! 2

2 கோடி ரூபாயை தனது அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த மிட்செல் ஸ்டார்க்கிற்கு மிக கடுமையான போட்டி நிலவியது. ஆரம்பத்தில் மிட்செல் ஸ்டார்க்கை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 கோடிக்கு மேல் பின்வாங்கியது.

மும்பை இந்தியன்ஸ் அணி பின்வாங்கிய பிறகு களத்திற்குள் வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மிட்செல் ஸ்டார்க்கிற்காக கடுமையான போராடின.

மிட்செல் ஸ்டார்கை விட்டே கொடுக்காமல் கொல்கத்தா, குஜராத் உள்ளிட்ட அணிகள் போராடியதால் மிட்செல் ஸ்டார்கின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. குஜராத் அணி கடுமையாக போராடினாலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடாப்பிடியாக இருந்து இறுதியாக 24.75 கோடி ரூபாய்க்கு மிட்செல் ஸ்டார்கை ஏலத்தில் எடுத்துள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *