டி20 உலகக்கோப்பையில் உட்காரவைக்கப்பட்ட மிதாலி: ஓய்வை அறிவிக்க சிந்தனை!! 1

மகளிருக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் ஆடும் லெவன் இலிருந்து உட்கார வைக்கப்பட்டார். பின்னர் அந்த போட்டியில் இந்திய அணி படு மோசமாக தோற்றது. இதற்கு காரணம் மிதாலி ராஜ் அணியில் இல்லததுதான் என பலர் விமர்சனம் வைத்தனர். இந்நிலையில் மிதாலி ராஜ் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற மகளிர் உலகக்  கோப்பை 20 ஓவர் தொடரில், இரண்டு அரைசதங்கள் விளாசிய மிதாலிராஜ் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து, மிதாலி ராஜ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.டி20 உலகக்கோப்பையில் உட்காரவைக்கப்பட்ட மிதாலி: ஓய்வை அறிவிக்க சிந்தனை!! 2
மேலும் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, தானும் இதேபோல் நல்ல நிலையில் விளையாடியபோது அணியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கூறியதாவது:-  ‘மகளிர் ஒருநாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் உட்கார வைக்கப்பட்டதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. இது நடப்பதுதான். நானும் கேப்டன் பதவிக்குப் பிறகு உட்கார வைக்கப்பட்டேன். பைசலாபாத்தில் என்னை இப்படி உட்கார வைத்தார்கள்.
அப்போது ஒருநாள் போட்டிகளில் நான் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தாலும், 15 மாதங்களாக நான் ஆடவே இல்லை.
வாழ்க்கையில் இப்படியும் நடக்கும். மிகச் சிறந்தவர்களுக்கு சில வேளைகளில் கதவு மூடப்படும். மிதாலி ராஜுக்கு இது முடிவு அல்ல, அவரது பயணம் இதோடு முடிந்துவிடாது’ என தெரிவித்துள்ளார்.டி20 உலகக்கோப்பையில் உட்காரவைக்கப்பட்ட மிதாலி: ஓய்வை அறிவிக்க சிந்தனை!! 3

நன்றாக விளையாடிபோதும் மிதாலி ராஜ், டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அணியில் சேர்க்கப்படாதது போல, தன்னையும் அணியில் சேர்க்கவில்லை என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்ற மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இந்திய அணி அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

இந்தப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுவ்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *