வித்தியாசமான மிகப்பெரும் சாதனை படைத்த முன்னாள் கேப்டன்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மிதாலி 1999-ல் தனது 16-வது வயதில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சர்வதேச அரங்கில் நுழைந்தார். கடந்த 18 ஆண்டுகளில் மிகப் பெரிய உயரத்தை அடைந்த மிதாலி, 184 ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள், 49 அரை சதங்களுடன் 6,137 ரன்களை எடுத்துள்ளார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த முதல் வீராங்கனை என்ற பெருமை மிதாலி ராஜுக்குக் கிடைக்துள்ளது. மிதாலி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 20 வருடங்கள் மற்றும் 105 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளார்.

வித்தியாசமான மிகப்பெரும் சாதனை படைத்த முன்னாள் கேப்டன் !! 1

20 வருடங்கள் ஒரு நாள் போட்டியை விளையாடிய முதல் பெண் வீரரும் மிதாலி ராஜ்தான். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 6,000 ரன்களைக் கடந்த முதல் பெண் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையும் புரிந்துள்ளார்.

36 வயதான மிதாலி ராஜ், இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து இந்திய மகளிர் அணியை 10 டெஸ்ட் போட்டிகள், 89 20- 20 போட்டிகளில் தலைமை தாங்கிச் சென்றார். இந்நிலையில் கடந்த மாதம் 20 – 20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மிதாலி ராஜ் ஓய்வு பெற்றார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஆண்களில் இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் (22 ஆண்டுகள் 91 நாட்கள்) படைத்துள்ளார். சச்சினைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இலங்கை வீரர் ஜெய சூர்யா (21 வருடங்கள் 184 நாட்கள்) உள்ளார். • SHARE
 • விவரம் காண

  விராட் கோலி எல்லாம் மனுஷனெ கிடையாது..! வங்கதேச வீரர் தமிம் இக்பால் ஓப்பன் டாக்

  விராட்கோலி செய்த உடற்பயிற்சியில் பாதியை கூட நான் செய்தது கிடையாது என வங்காளதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார். வங்காளதேச ஒரு நாள்...

  வீடியோ: பைக்கில் மகளுடன் ஹாயாக ரவுண்டு அடிக்கும் தோனி! வைரல் வீடியோ உள்ளே..

  வீடியோ: பைக்கில் மகளுடன் ஹாயாக ரவுண்டு அடிக்கும் தோனி! வைரல் வீடியோ உள்ளே.. மகள் ஜிவாவுடன் பைக்கில் சுற்றிவரும் தோனியின் விடியோவை அவரது மனைவி...

  டி20 உலகக்கோப்பையை இந்த நாட்டில் நடத்தலாம் – அட்டகாசமான யோசனை சொன்ன முன்னாள் ஜாம்பவான்!

  டி20 உலகக்கோப்பையை இந்த நாட்டில் நடத்தலாம் - அட்டகாசமான யோசனை சொன்ன முன்னாள் ஜாம்பவான்! டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளிவைக்காமல் இந்தநாட்டில் நடத்தலாம் என...

  இங்க இல்லனா அங்க போவேன்! வேறு நாட்டிற்காக விளையாட கிளம்பும் நட்சத்திர வீரர்!

  இங்கிலாந்து அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால், அமெரிக்க அணிக்காக விளையாடத் தயாராக உள்ளதாக லியம் பிளங்கெட் கூறியுள்ளார். 35 வயது வேகப்பந்து வீச்சாளர் பிளங்கெட்,...

  தோனி, கோலி, ரோஹித் சர்மா செய்யாததை செய்து அசத்திய முகமது ஷமி! வேடிக்கை மட்டும் பார்க்கும் நட்சத்திர வீரர்கள்

  உத்தரப் பிரதேசத்தின் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஷமி புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் முகக்கவசங்களையும் வழங்கி சமூக சேவையில்...