மொயின் அலி விளையாட மாட்டாரு ! அவருக்கு பதிலா இவர் தான் விளையாடுவாரு ! சிஎஸ்கே சொன்ன காரணம் ? 1

மொயின் அலி அடுத்த போட்டியில விளையாட மாட்டாரு ! அவருக்கு பதிலா இவர் விளையாடுவாரு ! சிஎஸ்கே சொன்ன காரணம் ?

14வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 18 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இன்று இரண்டு போட்டிகள் நடத்த உள்ளது.

மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 19வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது.

மொயின் அலி விளையாட மாட்டாரு ! அவருக்கு பதிலா இவர் தான் விளையாடுவாரு ! சிஎஸ்கே சொன்ன காரணம் ? 2

ஆர்சிபி 8 புள்ளிகளூடன் முதலிடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எனவே, இன்று நடைபெறும் இந்த போட்டிக்கு எதிபார்ப்புகள் அதிகளவில் உள்ளது.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை நடைபெற்ற 15வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தனர். இந்த போட்டியில் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் மொயின் அலி பீல்டிங் செய்யும் போது பந்தை தடுக்க முயன்று காலில் காயம் ஏற்பட்டது.

மொயின் அலி விளையாட மாட்டாரு ! அவருக்கு பதிலா இவர் தான் விளையாடுவாரு ! சிஎஸ்கே சொன்ன காரணம் ? 3

தொடர்ந்து பீல்டிங் செய்ய முடியாததால் மருத்துவர் இவரை ஓய்வு அறைக்கு அழைத்து சென்றார். இதனால் இவர் அந்த போட்டியில் பவுலிங் கூட வீசவில்லை. இந்நிலையில், மொயின் அலியின் உடல்நலம் குறித்து சிஎஸ்கே அணி இன்னும் எந்தொரு தகவலையும் கொக்கவில்லை என்பதால் இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் மொயின் அலி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஒருவேளை மொயின் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக யார் விளையாடுவது என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது. எனவே, மொயின் அலி இடத்தை நிரப்ப சரியான வீரர் என்று பார்த்தால் சான்ட்னர் மற்றும் கிருஷ்ணப்ப கவுதம் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் விளையாட வாய்ப்பு இருக்கிறது. மொயின் அலி வெளிநாட்டு வீரர் என்பதால் அவருக்கு பதிலாக கவுதமை தேர்வு செய்தால் பிரவோவுக்கு வாய்ப்பு தர முடியும். இது சிஎஸ்குவுக்கு அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கருத்தப்படுகிறது.

மொயின் அலி விளையாட மாட்டாரு ! அவருக்கு பதிலா இவர் தான் விளையாடுவாரு ! சிஎஸ்கே சொன்ன காரணம் ? 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *