முகமது அமீர் சமீபத்தில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் ஓய்வு பெற்றதற்கு பாகிஸ்தான் அணி நிர்வாகத்தைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் தான் காரணம் என்று கூறி ஓய்வு பெற்றுள்ளார்.
முகமது ஆமீர் இப்படி செய்திருக்கக் கூடாது என்று தற்பொழுது முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் சோயப் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மற்றவர்களை குறை கூறுவதைத் தவிர்த்து, முதலில் நீங்கள் வளர வேண்டும்
முகமது அமீர் சமீபத்தில் பாகிஸ்தான் மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தனக்கு விளையாடும் வாய்ப்புகளை அவர்கள் வழங்க மறுப்பதாகவும், தன்னை ஓரம் கட்டு கிறார்கள் என்றும் கூறினார். அதன்காரணமாக தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறிய முகமது ஆமீர் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி தற்போது ஓய்வு பெற்று விட்டார்.

முகமது அமீர் இப்படி செய்திருக்கக் கூடாது என்று தற்போது அக்தர் கூறியிருக்கிறார். முதலில் நீங்கள் நன்றாக விளையாடி உங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டுமே தவிர டீம் மேனேஜ்மெண்ட் பயிற்சியாளர்களை குறை கூற கூடாது என்று கண்டித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் மிக்கி ஆர்த்தர் உங்களை காப்பாற்ற மாட்டார்
மேலும் உதாரணம் காட்டி ஒரு விஷயத்தை அத்தர் பகிர்ந்துள்ளார். முகமது ஹபீஸ்சை ஒரு சமயம் பாகிஸ்தான் டீம் மேனேஜ்மென்ட் புறக்கணித்தது உண்மைதான். ஆனால் அவர் டீம் மேனேஜ்மென்டை குறை கூறாமல் தன்னுடைய போட்டியை மேம்படுத்தினார். அவரிடமிருந்து எப்படி உங்களுடைய விளையாட்டை மேம்படுத்த வேண்டும் என்று முதலில் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார்.மேலும் ஒவ்வொரு முறையும் உங்களை மிக்கி ஆர்த்தர் வந்து காப்பாற்ற மாட்டார் என்றும் இறுதியாக கடுமையாக முகமது ஆமிரை கண்டித்துள்ளார்.

முகமது அமீர் 2009ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை மொத்தமாக 36 டெஸ்ட் போட்டிகள், 61 ஒருநாள் போட்டிகள் மற்றும் 50 டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.