சிறுமி ஆசிஃபாவை போலவே எனக்கும் கொடுமை நடந்தது; ஷமி மனைவி புதிய குற்றச்சாட்டு !! 1

சிறுமி ஆசிஃபாவை போலவே எனக்கும் கொடுமை நடந்தது; ஷமி மனைவி புதிய குற்றச்சாட்டு 

காஷ்மீரில் 8 கொடூரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட கதுவா சிறுமி ஆசிஃபாவிற்கு நடந்த கொடுமைகளை போலவே தன்னையும் ஷமி குடும்பம் கொடுமை படுத்தியதாக ஹசீன் ஜஹான் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. கடந்த பிப்ரவரி மாதத்தில் இவரது சொந்த வாழ்க்கையில் மனைவி ஹசின் ஜகான் ரூபத்தில் புயல் வீசத் தொடங்கியது. ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் முகநூலில் பதிவிட்டார்.

சிறுமி ஆசிஃபாவை போலவே எனக்கும் கொடுமை நடந்தது; ஷமி மனைவி புதிய குற்றச்சாட்டு !! 2

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் எனக்கு உண்மையாக இல்லாத ஷமி நாட்டுக்கும் உண்மையாக இல்லை என அடுத்த குண்டை தூக்கிப் போட்டார். ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதற்காக பாகிஸ்தான் பெண், ஷமிக்கு பணம் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

சிறுமி ஆசிஃபாவை போலவே எனக்கும் கொடுமை நடந்தது; ஷமி மனைவி புதிய குற்றச்சாட்டு !! 3

மனைவியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் நிலைகுலைந்துப்போன ஷமி, சில நாட்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஷமி, மனைவியின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். என் நாட்டுக்கு துரோகம் செய்வதை விட இறந்து விடுவேன் எனக் கூறினார்.இந்நிலையில் ஷமியின் மனைவி அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார்அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஷமியின் மனைவி ஹசீன் ஜஹான் ஷமியும் அவரது குடும்பமும் சேர்ந்து தன்னை கொலை செய்து காட்டிற்குள் புதைத்துவிட திட்டமிட்டதாக புதிய குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.

சிறுமி ஆசிஃபாவை போலவே எனக்கும் கொடுமை நடந்தது; ஷமி மனைவி புதிய குற்றச்சாட்டு !! 4

இது குறித்து ஹசீன் ஜஹான் கூறியதாவது, “கதுவா சிறுமி ஆசிபாவிற்கு ஏற்பட்ட கொடூரம் மன்னிக்க முடியாதது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். ஆசிபாவிற்கு ஏற்பட்டதை போன்ற அதை கொடுமைகளை ஷமியின் குடும்பமும் எனக்கு செய்தது. எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை செய்து காட்டிற்குள் புதைக்கவும் ஷமியின் குடும்பம் திட்டம் தீட்டியிருந்தது. அவர்களுக்கு எதிராக போராடிய நான் தற்போது உயிரோடு இருப்பதே மிகப்பெரிய விசயம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *