அவர் எப்பவுமே வேற லெவல் தான்; சக பந்துவீச்சாளரை பாராட்டி பேசிய முகமது ஷமி !! 1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பேட் கம்மின்ஸ் வீசினால் முஹம்மத் சமயம் கையில் காயம் ஏற்பட்டது இதன் காரணமாக இவர் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கு பெறவில்லை சமமாக நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளிலும் இவரால் பங்கு கொள்ள முடியவில்லை.

பெங்களூருவில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி வருகிற ஐபிஎல் போட்டியில் களமிறங்க காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா குறித்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அவர் எப்பவுமே வேற லெவல் தான்; சக பந்துவீச்சாளரை பாராட்டி பேசிய முகமது ஷமி !! 2

அதில் அவர் கூறியதாவது, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா ஒரு மிகச்சிறந்த மனிதர் அவர் என்னை விட இரண்டு மடங்கு போட்டிகள் விளையாடி இருக்கிறார் நான் இந்திய அணிக்கு அறிமுகமாகும்போது அவர் 50 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார், ஆனால் இஷாந்த் ஷர்மா இதுவரை ஒருமுறை கூட சீனியர் என்ற கண்ணோட்டத்தோடு நடந்ததில்லை இவர் அனைவருடனும் இணைந்து சிரித்துக்கொண்டு நன்றாக பழகுவார் என்று கூறினார்.

மேலும் ஒரு இளம் வீரர் அணியில் இணைந்தார் அவர்கள் நன்றாக பேசி அவருடைய தன்னம்பிக்கையையும் உறுதியையும் வளர்ப்பதற்கு இஷாந்த் ஷர்மா உதவி செய்வார், நாங்கள் கடந்த 5 வருடங்களாக மிகவும் சந்தோஷத்தில் உள்ளோம் நாங்கள் எப்பொழுதெல்லாம் தளர்வாக இருக்கிறோமோ அப்பொழுது எல்லாம் ஒருவருக்கு ஒருவர் எங்களை உற்சாகப் படுத்திக் கொள்வோம், நாங்கள் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் கூட்டம் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி தெரிவித்திருந்தார்.

அவர் எப்பவுமே வேற லெவல் தான்; சக பந்துவீச்சாளரை பாராட்டி பேசிய முகமது ஷமி !! 3

இஷாந்த் ஷர்மா இந்திய அணிக்காக 101 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 303 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் வருகிற ஐபிஎல் போட்டியில் இஷாந்த் ஷர்மா மற்றும் முகமது சமி நிச்சயம் விளையாட உள்ளனர். குறிப்பாக முஹம்மத் சாமி பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் இஷாந்த் ஷர்மா டெல்லி கேப்பிடல் அணியிலும் விளையாட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *