பும்ராஹ் இல்லை... ஒருநாள் தொடரில் இவரை எப்படி சமாளிக்க போறோம்னு தான் தெரியல; தென் ஆப்ரிக்கா வீரர் ஓபன் டாக் !! 1

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி குறித்து பாராட்டிப் பேசியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது,இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

பும்ராஹ் இல்லை... ஒருநாள் தொடரில் இவரை எப்படி சமாளிக்க போறோம்னு தான் தெரியல; தென் ஆப்ரிக்கா வீரர் ஓபன் டாக் !! 2

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி செயல்பட்டார். இவர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் 5 விக்கெட்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் முகமது சமி டெஸ்ட் அரங்கில் தனது 200 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார். இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

மேலும் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் முகமது சமி இதுவரை 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அபார பார்மில் இருக்கும் முகமது சமியை பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர், அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்க்கல் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது முகமது சமியை பாராட்டிப் பேசியுள்ளார்.

பும்ராஹ் இல்லை... ஒருநாள் தொடரில் இவரை எப்படி சமாளிக்க போறோம்னு தான் தெரியல; தென் ஆப்ரிக்கா வீரர் ஓபன் டாக் !! 3

அதில் அவர் பேசியதாவது, முகமது சமி டுயூன் பண்ண இன்ஜின் போல் மிகவும் பிரமாதமாக செயல்படுகிறார் அவருடைய ரன் அப், மேலும் அவருடைய பந்து வீசிய விதம் மிகவும் பிரமாதமாக உள்ளது, மேலும் இவருடைய பந்துவீச்சால் தென்ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் நிலை தடுமாறுகின்றனர் என்று மோர்கள் பாராட்டிப் பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர், வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் சமி ஆகிய இருவரின் பந்துவீச்சை சமாளிக்க வேண்டும் என்பது தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது இதனால் தென் ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் இவர்கள் இருவரை தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்களை டார்கெட் செய்ய வேண்டும் என்று எண்ணி தனது விக்கெட்டை இழந்து விடுகின்றனர், மேலும் தென் ஆப்பிரிக்க அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் முகமது ஷமியின் பந்துவீச்சில் எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து விவாதம் நடைபெற்று வருவதாகவும் மார்க்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *