3வது டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுக்கும் முக்கிய வீரர்;வீடியோ உள்ளே!! 1

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பங்கேற்பு, ரசிகர்கள் கொண்டாட்டம்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.

3வது டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுக்கும் முக்கிய வீரர்;வீடியோ உள்ளே!! 2

சமீபமாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அந்த போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார் மேலும் அதற்குப்பின் அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

காயத்தில் இருந்து மீண்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நேஷனல் கிரிக்கெட் அகாடமி தனது பயிற்சியை தொடங்கினார்.

3வது டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுக்கும் முக்கிய வீரர்;வீடியோ உள்ளே!! 3


இந்நிலையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி மற்றும் முகமது ஷமி காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டியிலும் விளையாடவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் வருத்தம் அளித்தது, இந்நிலையில் இருவரும் சேர்ந்து பயிற்சி எடுக்கும் வீடியோவை முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இது ரசிகர்களிடத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.


ஷமீயின் காயம் குணமாகிக்கொண்டு இருக்கிறது என்று மருத்துவ குழு தெரிவித்த நிலையில் இந்த வாரம் முழுவதும் லோ இன்டன்சிடி பயிற்சியில் உள்ளார், மேலும் அடுத்த வாரம் இவருக்கு மீடியம் இன்டன்சிடி பயிற்சி கொடுக்கப்படும் அதன்பின் முழுவேகத்துடன் அகமதாபாத்தில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இரவு பகல் ஆட்டமாக இருப்பதால் அந்த போட்டிக்கு அனுபவ வீரரரான முகமது ஷமி இந்திய அணிக்குத் திரும்பியது இந்திய அணிக்கு பலமாக அமந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *