முகமது சிராஜ் கண்ணுல இருந்து தண்ணியே வந்திடுச்சு... ஆஸ்திரேலிய ரசிகர்களின் அடாவடிதனத்தை அம்பலப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் !! 1

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கண்கலங்கிய சம்பவத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் நினைவுபடுத்தியுள்ளார்.

2021இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்கள் இல்லாத இந்திய அணி அஜிங்கிய ரஹானே தலைமையில் 2-1 என தொடரை கைபற்றி வரலாற்று சாதனை படைத்தது.

 

முகமது சிராஜ் கண்ணுல இருந்து தண்ணியே வந்திடுச்சு... ஆஸ்திரேலிய ரசிகர்களின் அடாவடிதனத்தை அம்பலப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் !! 2

இந்தத் தொடரில் ரோகித் சர்மா,விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் இந்திய அணியின் இளம் வீரர்களைக் கொண்ட படை ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றது.

 

இந்திய அணியின் வெற்றியை சகிக்காத கெட்ட எண்ணம் கொண்டவர்கள்….

அந்தத் தொடரின் போது சில கல்நெஞ்சம் கொண்ட ரசிகர்கள் இந்திய வீரர்களை நிறவெறி வார்த்தைகளால் தாக்குதல் செய்தல்.

முகமது சிராஜ் கண்ணுல இருந்து தண்ணியே வந்திடுச்சு... ஆஸ்திரேலிய ரசிகர்களின் அடாவடிதனத்தை அம்பலப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் !! 3

இந்திய அணியிலிருந்த முகமது சிராஜ், அஜிங்கிய ரஹானே போன்ற வீரர்களை கடுமையான சொற்களால் கத்தி கூச்சலிட்டனர்.இதனால் சிராஜ் கண் கலங்கி அழுதுவிட்டார்,பின் கள நடுவர்களின் உத்தரவின்படி போட்டியை நிறுத்திவிட்டு மைதானத்தில் இருந்த காவலர்கள் கலகக்காரர்களை அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பைன் விவரித்து பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது, (முகமது சிராஜ் பவுண்டரி லைன் அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.அப்போது கெட்ட எண்ணம் கொண்ட சிலர் அவரை நிறவெறி தாக்குதல் செய்தனர்), அந்த சம்பவம் எனக்கு தற்பொழுதும் ஞாபகம் உள்ளது, முகமத் சிராஜ் அழுது கொண்டே நடந்து வந்தார் அவருடைய கண்ணீர் தாடைவழியாக கொட்டியது, அந்த சம்பவம் அவரை மனதளவில் அதிகமாக பாதித்து விட்டது, அந்த இளம் வீரர் அந்த சமயத்தில் தான் தன்னுடைய தந்தை இலந்திருந்தார். அந்த வேதனையில் இருந்து கூட அவர் மீளவில்லை, இந்த சம்பவம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்று டிம் பைன் பேசியிருந்தார்.

முகமது சிராஜ் கண்ணுல இருந்து தண்ணியே வந்திடுச்சு... ஆஸ்திரேலிய ரசிகர்களின் அடாவடிதனத்தை அம்பலப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் !! 4

இதேபோன்ற நிறைவேறி தாக்குதலை இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a comment

Your email address will not be published.