தீயா பந்துவீசுறாரு.... இவர் இல்லேனா பெங்களூர் அணி அவ்வளவு தான்; இந்திய வீரரை பாராட்டி பேசிய ஹசில்வுட் !! 1
தீயா பந்துவீசுறாரு…. இவர் இல்லேனா பெங்களூர் அணி அவ்வளவு தான்; இந்திய வீரரை பாராட்டி பேசிய ஹசில்வுட்

பெங்களூர் அணிக்காக விளையாடிய ஹசில்வுட், முகமது சிராஐ வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர், ஆண்டுதோறும் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ள ஐபிஎல் தொடரின், கடந்த சீசனில் குஜராத் அணி கோப்பையை வென்றது. இந்த வருடத்திற்கான தொடரில், முதல் போட்டியில் தோல்வியுடன் தொடரை துங்கிய சென்னை அணி, இறுதி வரை முன்னேறி, முதல் போட்டியில் தங்களை வீழ்த்திய குஜராத் அணியை, கடைசி ஓவரின் கடைசி பந்தில் வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

தீயா பந்துவீசுறாரு.... இவர் இல்லேனா பெங்களூர் அணி அவ்வளவு தான்; இந்திய வீரரை பாராட்டி பேசிய ஹசில்வுட் !! 2

கடந்த தொடர்களை விட பெங்களூர் அணி இந்த தொடரில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடிய போதிலும், இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

பந்துவீச்சில் பலவீனமாக இருப்பதால் மட்டுமே பெங்களூர் அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதாகவே முன்னாள் வீரர்கள் பலர் பேசி வருகின்றனர். வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ் மட்டுமே ஒவ்வொரு போட்டியிலும் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தார். மற்றவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை, இதுவும் பெங்களூர் அணியின் தொடர் தோல்விகளுக்கான காரணமாக அமைந்தது.

தீயா பந்துவீசுறாரு.... இவர் இல்லேனா பெங்களூர் அணி அவ்வளவு தான்; இந்திய வீரரை பாராட்டி பேசிய ஹசில்வுட் !! 3

இந்தநிலையில், நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் குறித்தும், எதிர்வரும் டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி குறித்தும் பேசிய பெங்களூர்அணியின் நட்சத்திர வீரரான ஹசில்வுட், முகமது சிராஜின் பந்துவீச்சை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து ஹசில்வுட் பேசுகையில், “நான் பெங்களூர் அணியுடன் இந்த தொடரில் தாமதமாகவே இணைந்தேன். நான் செல்வதற்கு முன்பே முகமது சிராஜ் பந்துவீச்சில் தீயாக செயல்பட துவங்கிவிட்டார். ஒவ்வொரு போட்டியிலும் அவர் பெங்களூர் அணிக்கான தனது பங்களிப்பை மிக சரியாக செய்து கொடுத்தார் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் தனது பந்துவீச்சில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொண்டே இருக்கிறார். பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பெங்களூர் சின்னசாமி ஆடுகளத்தில் கூட முகமது சிராஜ் மிக குறைவான ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்தார், இது சாதரண விசயம் இல்லை. அவரது திறமையை பாராட்டியே ஆக வேண்டும்”என்று தெரிவித்தார்.

பெங்களூர் அணிக்காக இந்த தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய முகமது சிராஜ், அதில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *