என் தந்தைக்காக இதை நிச்சயம் செய்வேன்; முகமது சிராஜ் உறுதி !! 1

மறைந்த தன் தந்தைக்காக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முகமது சிராஜ் விரும்புவதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக பயிற்சி எடுத்து வரும் நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ்ஜின் தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

என் தந்தைக்காக இதை நிச்சயம் செய்வேன்; முகமது சிராஜ் உறுதி !! 2

நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்த தனது தந்தையின் மரணத்திற்கு கூட வரமால் முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவிலே இருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. கங்குலி போன்ற முன்னாள் வீரர்கள் பலர் முகமது சிராஜ்ஜின் மன தைரியத்தை வெளிப்படையாகவே பாராட்டியும் பேசினர்.

இந்தநிலையில், முகமது சிராஜ்ஜின் சகோதரர் இஸ்மாயில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மறைந்த தங்களது தந்தைக்காக ஆஸ்திரேலிய தொடரை நிச்சயம் வெல்வோம் என முகமது சிராஜ் உறுதியாக கூறியதாக தெரிவித்துள்ளார்.

என் தந்தைக்காக இதை நிச்சயம் செய்வேன்; முகமது சிராஜ் உறுதி !! 3

இது குறித்து முகமது சிராஜ்ஜின் சகோதரர் பேசுகையில், “இந்திய கிரிக்கெட் அணியின் மேனஜரோடு நான் தொடர்ந்து பேசி வருகிறேன், அவர் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார். எனது சகோதரன் முகமது சிராஜ்ஜிற்கு ஆதரவாக இருக்கும் விராட் கோஹ்லி மற்றும் ரவி சாஸ்திரிக்கு நாங்கள் நன்றிகடன் பட்டுள்ளோம். அணியின் மற்ற வீரர்களும் தகவல் அறிந்த உடன் சிராஜ்ஜின் அறைக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர், அவருக்கு உறுதுணையாகவும் இருந்து வருகின்றனர். தந்தைக்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை நிச்சயம் வெல்வோம் என்றும் இந்த தொடரில் நிச்சயம் சிறபான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றும் சிராஜ் உறுதியாக தெரிவித்துள்ளார். சிராஜ் இந்தியா திரும்புவதற்கே விரும்பினார், ஆனால் அவரை நான் தான் அவரை தடுத்தேன். எங்கள் வீட்டின் கடைசி பையன் என்பதால் சிராஜ் மீது எங்கள் தந்தையும் அதிகமான அன்பு வைத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் குவாரண்டைனில் இருக்கும் சிராஜ் எங்களை போன் செய்யும் பொழுதெல்லாம் அழுகிறார், நாங்கள் அவருக்கு ஆறுதலாக பேசி வருகிறோம்” என்றார்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி;

விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, மாயன்க் அகர்வால், ப்ரித்வி ஷா, கே.எல் ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, அஜிக்னியா ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மன் கில், விர்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *