மொயின்-உட்-டவுளா தங்கக்கோப்பை 2017: சதம் அடித்து அசத்தினார் நமன் ஓஜா

50 ஓவர் மொயின்-உட்-டவுளா தங்கக்கோப்பை 2017-இல் மூன்றாவது சுற்றில் ஐதராபாத் அணிக்கு எதிராக 165 ரன் அடித்தார் 34 வயதான இந்திய அணியின் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் நமன் ஓஜா. இதனால், அவருடைய அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் விளையாடிய ஐதராபாத் ப்ரெசிடெண்ட் XI அணி, அந்த அணியின் நான்கு வீரர்கள் அரைசதம் அடித்ததால், 50 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழந்து 284 ரன் சேர்த்தது.

ஆனால், ஏர் இந்தியா அணிக்காக விளையாடிய நமன் ஓஜா சிறப்பாக விளையாடி சதம் அடித்ததால், ஏர் இந்தியா அணி 45.1 ஓவரில் வெற்றி பெற்றது. அந்த அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா 32 ரன் அடித்தார்.

சிறப்பாக விளையாடிய நமன் ஓஜா 149 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.

இந்திய அணிக்காக மூன்று வகையான போட்டியிலும் நமன் ஓஜா விளையாடி இருக்கிறார். கடைசியாக இந்திய அணிக்காக 2015-இல் கொலோம்போவில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடினார்.

2000-01 இல் மத்திய பிரதேசம் அணிக்காக ரஞ்சி போட்டிகளில் அறிமுகமான ஓஜா, இந்திய அணிக்காக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இன்னொரு போட்டியில், ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் தன்மே அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்ததால், அவருடைய அணி வெற்றி பெற்றது.

அகர்வால் 131 பந்துகளில் 127 ரன் அடித்தார், அதில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். இதனால், அவருடைய அணி 50 ஓவர் முடிவில் 354 ரன் எடுத்தது.

முதலில் விளையாடிய ஐதராபாத் கிரிக்கெட் நிர்வாகம், 27வது ஓவரின் போது 148 ரன் சேர்த்த பிறகு முதல் விக்கெட்டை இழந்தார்கள். நல்ல தொடக்கம் கொடுத்ததால், அடுத்த வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

அடுத்து விளையாடிய கமிஷனர் மற்றும் பொது கணக்காய்வாளர்அணி 191 ரன்னுக்கு சுருண்டது.

மற்றொரு போட்டியில், விதர்பா அணிக்கு எதிராக ஆந்திரா அணி 207 எடுத்தது. இந்த எளிதான இலக்கை நோக்கி பயணம் செய்த விதர்பா அணி 125 ரன்னுக்கு சுருண்டது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.