ஜடேஜா, ருத்துராஜ் கெய்க்வாட் இல்லை... சென்னை அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்; வித்தியாசமான யோசனை சொல்லும் முன்னாள் வீரர் !! 1

தோனியின் ஓய்வுக்கு பிறகு சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பெனசர் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

2021 ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் அந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 4வது டைட்டில் பட்டத்தை வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

இந்நிலையில் 2022 காண ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற இருப்பதால் அது சம்பந்தமான கருத்துக்கள் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடத்தில் தற்போது பேசு பொருளாக உள்ளது.

ஜடேஜா, ருத்துராஜ் கெய்க்வாட் இல்லை... சென்னை அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்; வித்தியாசமான யோசனை சொல்லும் முன்னாள் வீரர் !! 2

2022 ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியின் கேப்டனாக மகேந்திரசிங் தோனி தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டாலும் மகேந்திர சிங் தோனிக்கு பின் சென்னை அணியின் கேப்டனாக எந்த வீரர் இருந்தால் அது சென்னை அணிக்கு பலமாக அமையும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பெனசர் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது தோனிக்கு பின் அடுத்த கேப்டன் யார் என்பது பற்றி பேசியுள்ளார்.

ஜடேஜா, ருத்துராஜ் கெய்க்வாட் இல்லை... சென்னை அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்; வித்தியாசமான யோசனை சொல்லும் முன்னாள் வீரர் !! 3

அனைத்து கிரிக்கெட் வல்லுநர்களும் ஜடேஜா மற்றும் ருத்ராஜ் ஆகிய வீரர்களை சென்னை அணியின் கேப்டனாக ஆக்குங்கள் என்று தெரிவித்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி புதுவித யோசனையாக இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் மோயின் அலியை சென்னை அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று அதில் பேசினார், அதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, சென்னை அணியின் அடுத்த கேப்டனாக ஆவதற்கு மோயின் அலிக்கு அனைத்து வகையான தகுதிகளும் உள்ளது குறிப்பாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றிலும் மோயின் அலி மிக சிறந்த முறையில் விளையாடி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்று அதில் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *