சச்சின் டெண்டுல்கரை எப்படி அவுட் செய்ய வேண்டும் என்று எனக்கும் இவருக்கும் நன்றாக தெரியும் - மாண்டி பணேசர் விளக்கம் 1

சச்சின் டெண்டுல்கரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவுட் செய்வது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் 9 முறையும் மாண்டி பணேசர் 11 முறையும் அவுட் செய்து இருக்கின்றனர். தற்போது மாண்டி பணேசர் எப்படி சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை அதிக முறை தங்கள் இருவரால் எடுக்க முடிந்தது என்று விளக்கமளித்துள்ளார்.

இடைவேளைக்கு பின் முதல் ஐந்து நிமிடங்களில் சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை கைப்பற்ற முடியும்

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர் ஒவ்வொரு போட்டியிலும் உணவு அல்லது தேனீர் இடைவேளை முடிந்தவுடன், முதல் ஐந்து நிமிடங்களில் அவர் தனது இயல்பான ஆட்டத்தை தொடங்க சில நிமிடங்கள் எடுத்துக் கொள்வார். அந்த ஐந்து நிமிடங்களுக்குள் அவரது விக்கெட்டை மிக சுலபமாக கைப்பற்றலாம்.

சச்சின் டெண்டுல்கரை எப்படி அவுட் செய்ய வேண்டும் என்று எனக்கும் இவருக்கும் நன்றாக தெரியும் - மாண்டி பணேசர் விளக்கம் 2

ஆனால் ஒருவேளை முதல் ஐந்து நிமிடங்களுக்குள் அவரது விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் போனால் நிச்சயமாக அதற்குப் பின்னர் அவரது விக்கெட்டை கைப்பற்றவே முடியாது. எனவே நானும் ஜிம்மி ஆண்டர்சனும் இடைவேளை முடிந்த முதல் ஐந்து நிமிடங்களுக்குள் முடிந்தவரை அவருக்கு பந்துவீசி அவரது விக்கெட்டை எடுத்து விடுவோம் என்று கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர்

200 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளார் டெண்டுல்கர், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சாதனையை தற்போது வரை தனது பெயருக்குப் பின்னால் வைத்துள்ளார். 200 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக அவர் மொத்தமாக குவித்துள்ள ரன்கள் 15,921 ஆகும். அதில் 51 சதங்களும் 68 அரை சதங்களும் அடங்கும்.

James Anderson

இங்கிலாந்துக்கு எதிராக மொத்தமாக 32 டெஸ்ட் போட்டிகளில் 2535 ரன்களை குவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக அவரது டெஸ்ட் பேட்டிங் அவரேஜ் 53.79 ஆகும். மேலும் இங்கிலாந்து 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 1575 பிரண்டை குவித்துள்ளார் இங்கிலாந்தின் அவருடைய பேட்டிங் அவரேஜ் 54.31 என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உடைய விக்கெட்டை கைப்பற்றி தனது டெஸ்ட் விக்கெட் கணக்கைத் தொடங்கினார்
மாண்டி பணேசர். குறிப்பாக 2012ஆம் ஆண்டு நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் அவர் வீசிய ஒரு பந்து மிக அற்புதமாக திரும்பி ஸ்டெம்பை பதம் பார்த்தது. அவர் வீசிய அந்த பந்து மிகச்சிறந்த பந்துகளில் அதுவும் என்று பலர் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *