எது நடக்கக்கூடாதோ அது நடந்துருச்சு.. டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறிய முக்கிய வீரர்; முதல் டெஸ்ட்-க்கு முன்னரே பின்னடைவு! 1

காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து முக்கிய வீரர் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா அணி பிப்ரவரி 1ஆம் தேதி இந்தியாவிற்கு வந்துவிட்டது. பெங்களூருவில் உள்ள மைதானத்தில் பிரத்தியேகமாக பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

எது நடக்கக்கூடாதோ அது நடந்துருச்சு.. டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறிய முக்கிய வீரர்; முதல் டெஸ்ட்-க்கு முன்னரே பின்னடைவு! 2

இந்திய துணைக்கண்ட மைதானங்கள் சுழல் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழல் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து அவர்களை வைத்து நுணுக்கமாக பயிற்சிகளை செய்து வருகின்றனர் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள். குறிப்பாக அஸ்வின் போன்று அச்சுஅசலாக ஆக்சன் மற்றும் டெக்னிக் போன்று பந்துவீசி வரும் இளம் சுழல் பந்துவீச்சாளரை வைத்து ஸ்பெஷலாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியிட்டது ஆஸ்திரேலியா அணியின் நிர்வாகம்.

இதற்கிடையில் இரு அணிகளிலும் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற முடியாமல் சிக்கலில் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை, நேதன் லயன் மற்றும் மிட்ச்சல் ஸ்டார்க் இரண்டு பேரும் முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவலில் இருப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

எது நடக்கக்கூடாதோ அது நடந்துருச்சு.. டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறிய முக்கிய வீரர்; முதல் டெஸ்ட்-க்கு முன்னரே பின்னடைவு! 3

ஏனெனில் இரண்டு பேரும் காயத்திலிருந்து சமீபத்தில் தான் குணமடைந்து வந்திருக்கின்றனர். மீண்டும் காயம் ஏற்பட்டு மீதியிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாமல் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்கிற காரணத்திற்காக சந்தேகத்தில் வைத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் தற்போது மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்று தெரியவந்திருக்கிறது. ஏனெனில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக குணமடைந்துவிடும் என எதிர்பார்த்த நிலையில், இன்னும் சரிவரவில்லை.

எது நடக்கக்கூடாதோ அது நடந்துருச்சு.. டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறிய முக்கிய வீரர்; முதல் டெஸ்ட்-க்கு முன்னரே பின்னடைவு! 4

மேலும் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பிறகு, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு குறைந்தகாலமே இருப்பதால் அதற்குள்ளும் இவர் குணமடைவார் என்று தெரியவில்லை என ஆஸ்திரேலியா அணியின் மருத்துவர்களால் கூறப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *