ரோகித் சர்மாவிற்கு 100 அடித்துவிட்டால் சற்று வேகமாக றன் சேர்க்க கூறிய திறம் மிக அதிகம். இன்று நடைபெற்ற (டிச.13) இலங்கை அணியுடனான இரண்டாவது ஒரு நாள்போட்டியில் இலங்கை பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்துவிட்டார். 153 பந்துகளுக்கு 208 ரன் குவித்து ஒருநாள் போட்டிகளில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை விளாசினார். முதலில் மெதுவாக 115 பந்துகளுக்கு சதம் அடித்த ரோகித், பின்னர் தனது ருத்ரதாண்டவதை காட்டத் துவங்கினார். அடுத்த 38 பந்துகளுக்கு 108 ரன் குவித்து இலங்கை பந்து வீச்சாளர்களை விளாசி தள்ளினார்.

Photo by Deepak Malik / BCCI / Sportzpics
இது ரோகித் சர்மாவின் 6ஆவது 150+ ஸ்கோராகும். மேலும், இந்த 6ஆவது 150+ ஸ்கோரினால் கிரிக்கெட் ஜாம்பவான் சாதனைகளை தகர்த்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக 150+ அடித்த வீரர்கள் பட்டியல் கீழே :
6.ஜெயசூர்யா – 4
இலங்கை அணியின் ஓய்வுபெற்ற இடது கை பேட்ஸ்மேன். இவர் ஒரு அதிரடி வீரர் ஆவார். மொத்தம் 29 சதங்களுடன் நான்கு 150+ ஸ்கோர் அடித்துள்ளார்.