இந்திய அணியில் அதிக போட்டிகளை தவற விட்டு மீண்டும் அணியில் இடம்பிடித்து ஆடிக்கொண்டிருக்கும் வீரர்களின் பட்டியலை தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

ஒவ்வொரு வீரரும் தனது போராட்ட காலங்களை கண்டு தான் ஆக வேண்டும். அணியில் இடம்பெறுவதும் சோதப்பிய பிறகு அணியில் இருந்து நீக்கப்படுவதும் இந்திய வீரர்களுக்கு பழகிய ஒன்றே.
ஆனால் ஒரு சில வீரர்களே உள்ளுர் போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம் பிடிக்கின்றனர். இது டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமல்ல. ஒருநாள் டி20 போட்டிகளிலும் நிகழும் ஒன்று தான்.
தினேஷ் கார்த்திக் மீண்டும் டி20 அணியில்

தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் முதல் டி20 போட்டி 2006ம் ஆண்டு நடக்கையில் இடம் பெற்றிருந்தாலும், அதன் பின் பெரிதும் இடம் பெறவில்லை. உலகக்கோப்பை அணியில் தோனி கீப்பிங் செய்ததால் இவருக்கு வாய்ப்பு குறைவாகவே இருந்தது.
தோனியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி வரவுக்கு பிறகு இவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்று தான் கூறவேண்டும். ஏனெனில், தோனியின் ஆட்டம் அப்படி. மேலும், அவர் கேப்டன் ஆன பிறகு. தினேஷ் கார்த்திக் வீட்டுக்கு நடையை கட்ட வேண்டியது தான் என்றே ஆகி விட்டது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவருக்கும் மீண்டும் இடம் கிடைத்தது. சஹா காயம் காரணமாக வெளியேறியதால் இவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. 89 டெஸ்ட் போட்டிகள் தவறவிட்ட பிறகு மீண்டும் அணியில் இடம்பெற்றார்.
தற்போது அயர்லாந்து அணிக்கு எதிராக நடக்கும் இறந்தாவது டி20 போட்டியிலும் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இவர் 56 டி20 போட்டிகளை தவறவிட்டு தற்போது மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
அதிக டி20 போட்டிகளை தவறவிட்ட வீரர்கள்:
உமேஷ் யாதவ் – 65 போட்டிகள்
தினேஷ் கார்த்திக் – 56 போட்டிகள்
ஆஷிஷ் நெஹ்ரா – 29 போட்டிகள்