இதுவரை இந்திய கிரிக்கெட் அணிக்கு பல வீரர்கள் கேப்டனாக செயல் பட்டுளார்கள். ஆனால், அதில் சில கேப்டன்கள் மட்டுமே பேட்டிங்கிலும் கலக்கி இருக்கிறார்கள். முன்னாள் கேப்டன்களான கங்குலி, தோனி, டெண்டுல்கர் ஆகியோர் கேப்டனாக மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல் பட்டுள்ளார்கள். இதுவரை இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்து அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
முகமது அசாருதீன் – 4
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கேப்டனாக இருந்து 162 இன்னிங்சில் விளையாடி நான்கு சதம் அடித்து இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் / எம்.எஸ். தோனி – 6
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் பேட்டிங்கிலும் கலக்கியிருக்கிறார்கள் என நமக்கு தெரியும். 70 இன்னிங்சில் சச்சினும் மற்றும் 171 இன்னிங்சில் தோனியும் கேப்டனாக விளையாடி 6 சதம் அடித்திருக்கிறார்கள்.
சவுரவ் கங்குலி – 11
துவண்டு போன இந்திய அணியை மீண்டும் பலமாக மாற்றிய கேப்டன் சவுரவ் கங்குலி தான் என நாம் அனைவர்க்கும் தெரியும். கேப்டனாக மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் கேப்டனாக 11 சதம் அடித்திருக்கிறார் கங்குலி.
விராட் கோலி – 12
இந்திய அணியின் இளம் வீரர் விராட் கோலி தான் கேப்டனாக பதவியேற்ற 43வது இன்னிங்சில் 12 சதங்கள் அடித்து இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.