தலைவன் தோனிக்காக சமூக வலைதளங்களில் சண்டை செய்யும் ரசிகர்கள் !! 1

தலைவன் தோனிக்காக சமூக வலைதளங்களில் சண்டை செய்யும் ரசிகர்கள்

உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆனதற்கு பின்னர் தோனியை கிரிக்கெட் ஆடுகளத்தில் பார்க்கவே முடியவில்லை. களத்தில் தோனியை காண முடியாமல் அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் இருக்கிறார்கள். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. அதனால், தோனி அடுத்த எந்தப் போட்டியில் களமிறங்குவார் என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.

இதனிடையே, சர்வதேச கிரிக்கெட் உலகிற்குள் தோனி காலெடுத்து வைத்து கடந்த டிசம்பர் 23ம் தேதியுடன் 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. 15 ஆண்டுகள் கடந்து விட்டதை தோனியின் ரசிகர்கள் உருக்கத்துடன் அனுசரித்தார்கள். சமூக வலைதளங்கள் தோனி பற்றிய பல்வேறு நினைவுகளை பதிவிட்டனர்.

தலைவன் தோனிக்காக சமூக வலைதளங்களில் சண்டை செய்யும் ரசிகர்கள் !! 2

இந்நிலையில்தான், ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த 10 ஆண்டுகளில் யார் சிறந்த கேப்டன் என்பதை சொல்லுங்கள்..?’ என்று கேள்வி எழுப்பியுள்ளது. ட்விட்டர் போட்டதுதான் தாமதம், தோனியின் ரசிகர்கள் படையெடுக்க தொடங்கிவிட்டார்கள். தோனி தான் சிறந்த கேப்டன் என மளமள பதிவுகளை தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

‘மகேந்திர சிங் தோனி தான். அவர்தான் இந்திய அணியின் சிறந்த கேப்டன். சர்வதேச கிரிக்கெட் உலகிலும் சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர்’ என்று ஒருவர் கூறினார். ‘இது கடந்த 10 ஆண்டுகளுக்கு மட்டுமே. அதனால், விராட் கோலி அடுத்த 10 ஆண்டுகளில் இடம்பெறுவார். இந்த 10 ஆண்டுகள் தல தோனிக்கு உரியது’ என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு உட்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளமான கிரிக்டெ்.காம்.ஆஸ்திரேயா (www.cricket.com.au) கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து ஒரு கனவு அணியை உருவாக்கியது. அந்த அணிக்கு இந்தியாவின் எம்.எஸ்.தோனியை கேப்டனாக நியமித்தது. ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை கூட கண்டுக்கொள்ளாமல், தோனிக்கு கேப்டன் பதவியை கொடுத்து கவுரவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *