விரைவில் உருவாகுகிறது தல தோனி வாழ்க்கை வரலாறு படத்தின் இரண்டாம் பாகம்..? 1
விரைவில் உருவாகுகிறது தல தோனி வாழ்க்கை வரலாறு படத்தின் இரண்டாம் பாகம்..?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான ‘எம்.எஸ்.தோனி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணி 2011 உலகக்கோப்பையை வெல்ல மிக முக்கிய பங்காற்றியவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின் ஒருநாள், டி20 இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி, கடந்த ஆண்டு தனது கேப்டன் பதவியைத் துறந்தார்.

விரைவில் உருவாகுகிறது தல தோனி வாழ்க்கை வரலாறு படத்தின் இரண்டாம் பாகம்..? 2

இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டனாக பார்க்கப்படும் தோனியின் வாழ்க்கை வரலாறு படம் ‘எம்.எஸ்.தோனி-தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது. இதில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்திருந்தார். பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தத் திரைப்படம், சுஷாந்த் சிங் ராஜ்புட்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திலும், தோனியின் கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் உருவாகுகிறது தல தோனி வாழ்க்கை வரலாறு படத்தின் இரண்டாம் பாகம்..? 3

இந்தப் படத்தில் 2011 உலகக்கோப்பைக்குப் பின் தோனி வாழ்வில் நடந்த சம்பவங்கள், வெற்றிகள், தோல்விகள், விமர்சனங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. இதில், தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை மட்டுமில்லாமல் ஒரு கணவராகவும், ஒரு தந்தையாகவும் முன்னுதாரணமாக இருக்கும் தோனியை திரையில் காட்டப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் 2018 ஐபில் கோப்பையில் பல விமர்சனங்களையும் தாண்டி, தனது பேட்டிங் திறமையையும், கேப்டன்ஷிப் திறன்களையும் மீண்டும் தோனி நிரூபிப்பதாக படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால், தல தோனியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *