டி.20 அரங்கில் புதிய மைல்கல்லை எட்டினார் தல தோனி
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியின் மூலம் டி.20 அரங்கில் 50 கேட்ச் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு 199 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இந்த போட்டியில் தனி ஒருவனாக ஜொலித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த ஒரே போட்டியில் 5 கேட்ச் ஒரு ரன் அவுட் என மொத்தம் 6 விக்கெட் வீழ்வதற்கு காரணமாக அமைந்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இதில் குறிப்பாக இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேசன் ராயை தனது அசாத்திய கேட்ச் மூலம் வெளியேற்றிய தோனி சர்வதேச டி.20 அரங்கில் 50 கேட்ச்கள் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தோனியை பெற்றுள்ளார்.
இதே போல் சர்வதேச டி.20 அரங்கில் அதிக கேட்ச்கள் பிடித்துள்ள விக்கெட் கீப்பர்கள் பட்டியல்;
வெஸ்லே பார்ரேஸி – 26 கேட்ச்கள்
நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான வெஸ்லே பாரேஸி சர்வதேச டி.20 அரங்கில் 26 கேட்ச்கள் பிடித்து இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.