இன்னும் 2 உலகக்கோப்பை ஆடுவார் தோனி : க்ளார்க் 1

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடயேயான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை கொலகத்தா மைதானத்த்ல் நடைபெறுகிறது.

இதனஒயொட்டி ஆஸ்திரேலிய அணிய்னி முன்னாள் கேடன் மைக்கேல் கிளார்க் கொல்கத்தாவில் நேற்று அளித்த பேட்டியில் ,

Cricket, India, Australia, Steve Smith, Michael Clarke

ஸ்டீவன் சுமித்தின் பேட்டிங் நீண்ட நாட்களாக மிக அற்புதமாக இருந்து வருகிறது. ஆனால் அவரது கேப்டன்ஷிக்கு தற்போது சவால் ஏற்பட்டுள்ளது.

இன்னும் 2 உலகக்கோப்பை ஆடுவார் தோனி : க்ளார்க் 2

அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கான வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கு இது சரியான நேரமாகும். கொல்கத்தாவில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

இந்த போட்டி தான் ஒருநாள் தொடரின் போக்கை தீர்மானிக்கும் என்று நான் நினைக்கிறேன்.

 

 

இன்னும் 2 உலகக்கோப்பை ஆடுவார் தோனி : க்ளார்க் 3

இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடிக்கக்கூடிய சிறந்த பந்து வீச்சாளர். அவர் ரன்னை மட்டும் கட்டுப்படுத்தும் பந்து வீச்சாளர் அல்ல.

மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசும் அவர் தனது பின்பக்கமாக கையை கட்டுப்படுத்தும் விதம் அபாரமானது. அது தான் அவரது பலமாகும். அவர் எல்லா திறமையையும் ஒருசேர பெற்றுள்ளார்.

அவர் இருபுறமும் பந்தை திருப்புகிறார். நீண்ட நேரம் பந்து வீசுகிறார். டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசுகிறார்.

டோனி 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஆடுவாரா? என்று என்னிடம் கேட்காதீர்கள். அவர் 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியிலும் விளையாடுவார்.

இன்னும் 2 உலகக்கோப்பை ஆடுவார் தோனி : க்ளார்க் 4

டேவிட் வார்னர் வங்காளதேச தொடரில் சதம் அடித்தார். சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அவர் ரன் அடிக்கவில்லை என்பதை வைத்து அவரது திறமையை எடைபோடக்கூடாது.

இன்னும் 2 உலகக்கோப்பை ஆடுவார் தோனி : க்ளார்க் 5

ரன்கள் அடிக்கும் வழிமுறையை அவர் கண்டுபிடித்து கொள்வார். எப்பொழுதும் அப்படி செய்துள்ளார். அவர் இந்த போட்டி தொடரில் நிறைய தாக்கம் ஏற்படுத்துவார். அவரும், ஸ்டீவன் சுமித்தும் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிக ரன்கள் சேர்ப்பார்கள்.

கொல்கத்தா போட்டியில் இருந்து அவர்கள் ரன் குவிக்க தொடங்குவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கிளார்க் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *