கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை வெளியே சொல்ல மாட்டேன்; மைக் ஹசி திட்டவட்டம் !! 1

கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை வெளியே சொல்ல மாட்டேன்; மைக் ஹசி திட்டவட்டம்

தோனியின் பேட்டிங் விக்னெஸ் குறித்தான ரகசியத்தை ஆஸ்திரேலிய வீரர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக எம்எஸ் டோனி செயல்பட்டு வருகிறார். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹசி செயல்பட்டு வருகிறார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன்களின் பலவீனங்கள் மைக் ஹசிக்கு உறுதியாக தெரிந்திருக்கும். உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடரின்போது, ஆஸ்திரேலிய அணிக்கு மைக் ஹசி தகவலை பகிர்ந்து கொண்டால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படும்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை வெளியே சொல்ல மாட்டேன்; மைக் ஹசி திட்டவட்டம் !! 2
South Africa’s Andile Phehlukwayo (L) celebrates the wicket of India’s captain Virat Kohli (R) for 18 during the 2019 Cricket World Cup group stage match between South Africa and India at the Rose Bowl in Southampton, southern England, on June 5, 2019. (Photo by Dibyangshu SARKAR / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

இதுகுறித்து பிசிசிஐ ஏற்கனவே தனது கவலையை தெரிவித்திருந்தது. இந்நிலையில், எம்எஸ் டோனியின் பலவீனம் குறித்த செய்தியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டேன் என்று மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக் ஹசி கூறுகையில் ‘‘எம்எஸ் டோனியிடம் குறிப்பிட தகுந்த வகையில் எந்த பலவீனமும் இல்லை. ஒருவேளை அப்படி இருந்தாலும் கூட, நான் ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுடன் பகிர்ந்து கொள்ளமாட்டேன்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை வெளியே சொல்ல மாட்டேன்; மைக் ஹசி திட்டவட்டம் !! 3

அனைத்து வீரர்களை பற்றியும் ஒவ்வொரு அணிகளும் சிறந்த வகையில் ஆராய்ந்து வைத்திருக்கும். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியும் எம்எஸ் டோனிக்கு திட்டம் வகுத்திருக்கும்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *