அவர் இருக்க வரைக்கும் எனக்கு கவலயே இல்லாம இருந்தது, ஆனா இப்போ... கவலையில் குல்தீப் யாதவ் 1

தோனி கீப்பிங் செய்யும்போது பீல்டர்களை எங்கு நிற்கவைப்பது என்ற கவலை எனக்கு இருந்ததே இல்லை என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்பு சர்வதேசப் போட்டிகளில் ஏதும் தோனி பங்கேற்கவில்லை. இதனையடுத்து அவர் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளில் தோனியை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அதுவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அவர் இருக்க வரைக்கும் எனக்கு கவலயே இல்லாம இருந்தது, ஆனா இப்போ... கவலையில் குல்தீப் யாதவ் 2

“ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ” இணையதளத்துக்கு பேட்டியளித்த குல்தீப் யாதவ் “நான் என்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கியபோது, ஆடுகளத்தை கணிப்பதில் தடுமாறினேன். ஆனால் தோனியுடன் விளையாட ஆரம்பித்தவுடன் எனக்கு ஆடுகளம் குறித்து சரியான புரிதல் ஏற்பட்டது. அவர் நான் பந்துவீசும்போது ஆலோசனைகளை சொல்லிக்கொண்டே இருப்பார்” என தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்த அவர் “தோனிக்கு பீல்டர்களை எங்கெங்கு நிறுத்த வேண்டும் என நன்றாகவே தெரியும். நான் பவுலிங் செய்யும்போது அவர் கீப்பிங் செய்யும்போது அதைச் சரியாக புரிந்துக்கொண்டு பீல்டிங்கை அமைப்பார். பேட்ஸ்மேனை அவுட்டாக்குவதும் எளிதாக இருக்கும். எனக்கும் கவலையில்லை” என்றார் குல்தீப் யாதவ்.

அவர் இருக்க வரைக்கும் எனக்கு கவலயே இல்லாம இருந்தது, ஆனா இப்போ... கவலையில் குல்தீப் யாதவ் 3

 

 மைக்கேல் ஹசியின் ஐ.பி.எல்., ‘லெவன்’ அணிக்கு கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 13வது சீசன் கொரோனா அச்சம் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, ஐ.பி.எல்., ‘லெவன்’ அணி ஒன்றை தேர்வு செய்துள்ளார். இதில், 8 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.அவர் இருக்க வரைக்கும் எனக்கு கவலயே இல்லாம இருந்தது, ஆனா இப்போ... கவலையில் குல்தீப் யாதவ் 4

துவக்க வீரர்களாக ரோகித் சர்மா (மும்பை), டேவிட் வார்னர் (ஐதராபாத்) வாய்ப்பு பெற்றனர். அடுத்த இரு இடங்களுக்கு பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, டிவிலியர்ஸ் தேர்வாகினர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனி (சென்னை) இடம் பிடித்துள்ளார். இவரே இந்த அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

‘ஆல்–ரவுண்டர்’ இடத்துக்கு ஹர்திக் பாண்ட்யா (மும்பை), ஆன்ட்ரி ரசல் (கோல்கட்டா) தேர்வு செய்யப்பட்டனர். ‘சுழல்’ வீரர்களாக ரஷித் கான் (ஐதராபாத்), யுவேந்திர சகால் (பெங்களூரு) இடம் பிடித்தனர். வேகப்பந்துவீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார் (ஐதராபாத்), ஜஸ்பிரித் பும்ரா (மும்பை) தேர்வாகினர்.அவர் இருக்க வரைக்கும் எனக்கு கவலயே இல்லாம இருந்தது, ஆனா இப்போ... கவலையில் குல்தீப் யாதவ் 5

நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே இடம் என்பதால் கிறிஸ் கெய்ல் (பஞ்சாப்), லசித் மலிங்கா (மும்பை), சுனில் நரைன் (கோல்கட்டா) தேர்வு செய்யப்படவில்லை. தவிர, 12வது வீரராக லோகேஷ் ராகுல் (பஞ்சாப்) இடம் பிடித்துள்ளார்.

‘லெவன்’ அணி: ரோகித், வார்னர், கோஹ்லி, டிவிலியர்ஸ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரசல், ரஷித் கான், சகால், புவனேஷ்வர், பும்ரா. 12வது வீரர்: ராகுல்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *