இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம் இவர் தான்; சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்

மகேந்திர சிங் டோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்ததில் இருந்து, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ். டோனி எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை.

டோனி நடக்க உள்ள ஐபிஎல் 2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவும் இடம் பெற்று உள்ளார்.

இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம் இவர் தான்; சுரேஷ் ரெய்னா ஓபன் டாக் !! 1

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் வரும் “தி சூப்பர் கிங்ஸ் நிகழ்ச்சி”யில் கலந்து கொண்டு பேசிய சுரேஷ் ரெய்னா கூறியதாவது:-

எதையும் செய்ய முடியும் என இந்திய அணியை மாற்றிய சிறந்த கேப்டன் எங்களிடம் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான் .

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கம் முழுவதும் நிரம்பி இருக்கும். இப்போது எங்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் களத்தில் அதிக ஆற்றல் இருக்கும்.

இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம் இவர் தான்; சுரேஷ் ரெய்னா ஓபன் டாக் !! 2

இந்த ஆண்டு எங்கள் அணியில் நிறைய புதிய திறமைசாலிகள் உள்ளனர். பியூஷ் இருக்கிறார், பின்னர் எங்களிடம் ஹேசல்வுட், சாம் குர்ரான், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் கிஷோர் ஆகியோர் உள்ளனர். சாய் கிஷோர் அருமையாக பந்து வீசுகிறார். இது எங்கள் அணிக்கு மிகவும் நல்லது. நாங்கள் இளைஞர்கள் மற்றும் மூத்த வீரர்கள் அடங்கிய கலவை அணியை வைத்துள்ளோம். என கூறினார். • SHARE

  விவரம் காண

  ஆசிய லெவன் அணிக்கு எதிரான உலக லெவன் அணி அறிவிப்பு !!

  ஆசிய லெவன் அணிக்கு எதிரான உலக லெவன் அணி அறிவிப்பு வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசியா லெவன் மற்றும் உலக லெவனுக்கு இடையே நடக்கவுள்ள டி20...

  உலக லெவன் அணியை எதிர்கொள்ளும் ஆசிய லெவன் அணி அறிவிப்பு; 6 இந்திய வீரர்களுக்கு இடம் !!

  உலக லெவனை எதிர்கொள்ளும் ஆசிய லெவன் அறிவிப்பு; 6 இந்திய வீரர்களுக்கு இடம் வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசியா லெவன் மற்றும் உலக லெவனுக்கு இடையே...

  இவர் சொதப்பியதே தோல்விக்கு காரணம்: முண்ணனி வீரரை கைகாட்டும் சஞ்சய் மாஜரேக்கர்

  நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி சொதப்பியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய...

  வீடியோ: பவுண்டரி லைனில் பிரம்மாண்ட கேட்ச் பிடித்த டு ப்லெசிஸ் மற்றும் மில்லர்!

  தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது...

  சச்சினை ‘சூச்சின்’ என கண்டபடிக்கு உளறிய டிரம்ப்: பதிலடி கொடுத்த ஐசிசி

  அமெரிக்க அதிபர் தனது பேச்சின் போது "சூ சின்" முதல் கோலி போன்ற உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இந்திய நாட்டில் இருப்பதாக...