ஐபிஎல் தொடரில் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து மகேந்திர சிங் தோனி அவ்வளவாக ரசிகர்கள் கண்ணில் படவில்லை. இருப்பினும் தற்போது அவருடைய ஒரு புகைப்படம் சமூக வளைதளத்தில் வெளியாகியுள்ளது.
அவருடைய புகைப்படத்தை கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார் என்று தான் கூற வேண்டும். அவருடைய புகைப்படத்தை கண்ட பின்னர் பலரும் பலவிதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பாதியில் நின்ற ஐபிஎல் தொடர் ; ஏமாற்றத்தில் தோனி ரசிகர்கள்
மகேந்திர சிங் தோனி 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே ரசிகர்கள் ஐபிஎல் தொடரில் தான் அவர் விளையாடுவதைப் பார்க்க முடியும். சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அவர் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. எனவே இந்த ஆண்டு எப்படியாவது அவருடைய பழைய பார்மை கண்டு விடலாம் என்று நம்பியிருந்த ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே மீண்டும் ஐபிஎல் தொடர் நடை பெற்றாலோ அல்லது அடுத்த ஆண்டுதான் மீண்டும் அவருடைய ரசிகர்கள் அவருடைய ஆட்டத்தை கண்டுகளிக்க முடியும்.
புதிதாக வெளியான புகைப்படம்
இந்நிலையில் சமூக வலைதளங்களில் மகேந்திர சிங் தோனி அவ்வளவாக ஆக்டிவாக இருக்க மாட்டார். இருப்பினும் அவருடைய புகைப்படம் ஒன்று எதிர்பாராத விதமாக சமீபத்தில் வெளியானது. அந்தப் புகைப்படத்தில் தோனி தனது செல்லப்பிராணியான நாய் குட்டியுடன் அமர்ந்திருப்பது போல் இருந்தது. அந்த புகைப்படத்தில் மகேந்திர சிங் தோனியின் தாடி சற்று அதிகமாக நரைத்து இருந்தது. மேலும் அவர் சற்று வயதான தோற்றத்தில் இருந்தார்.
இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் அவருக்கு நாளுக்கு நாள் வயதாகிக் கொண்டு போகிறது. நிச்சயமாக இன்னும் 1 அல்லது 2 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடமாட்டார் என்று கூற ஆரம்பித்துவிட்டனர். மேலும் பல ரசிகர்கள் இளமையான தோனியை பார்த்துவிட்டு தற்பொழுது இப்படி ஒரு தோட்டத்தில் அவரைப் பார்ப்பதற்கு மனம் மறுக்கிறது என்று வருத்தத்துடன் பல ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.