மகேந்திர சிங் தோனி மற்றும் சந்தோஷ் லால் ஆகிய இருவரும் சிறு வயதில் இருந்தே சிநேகிதர்கள். இவர்கள் இருவரும் இணைந்து சிறு வயதில் கிரிக்கெட் விளையாடி தங்களுடைய நாட்களை செலவழித்து வருவார்கள். இவர்கள் சிறுவயதில் டென்னிஸ் பந்துகளை உபயோகித்து கிரிக்கெட் விளையாடி வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மகேந்திர சிங் தோனியின் நண்பர் சந்தோஷ் லால் அடிப்படையில் ஒரு அதிரடியான பேட்ஸ்மேன். அவர் விளையாடும் முறை மிக வித்தியாசமாக இருக்கும். ஒருமுறை சந்தோஷ அடித்த வித்தியாசமான கிரிக்கெட் ஷாட் மகேந்திர சிங் தோனியை கவர்ந்தது. உடனே மகேந்திர சிங் தோனி சந்தோஷ் இடம் சென்று இந்த ஷாட் பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு சந்தோஷ் இது ஸ்லாப் ஷாட் என்று கூறியிருக்கிறார்.

அந்த ஷாட்டை கற்றுக்கொள்வதற்கு சமோசா வாங்கி கொடுத்த கதை
மகேந்திர சிங் தோனி அவரிடம் அந்த கிரிக்கெட் ஷாட்டை கற்றுக்கொள்ள அவருக்கு சமோசாக்களை வாங்கிக் கொடுப்பார். அப்படி அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட ஷாட் தான் பின்னாளில் மகேந்திர சிங் தோனியின் மூலம் அறிமுகமான ஹெலிகாப்டர் ஷாட்.
அதன் பின்னர் சர்வதேச அளவில் மகேந்திர சிங் தோனி அறிமுகப்படுத்திய இந்த கிரிக்கெட் ஷாட் உலக அளவில் மிகவும் பிரபலமாக மாறியது.
நண்பரின் உயிர்காக்க ஹெலிகாப்டர் வரவைத்த மகேந்திர சிங் தோனி
ஒரு முறை இந்திய அணி சார்பாக சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் செல்ல இருந்த தோனிக்கு சந்தோஷ் உடல்நிலை சற்று சரியாக இல்லை என்ற தகவல் கிடைத்தது.கணையத்தில் அழற்சி நோய் இருந்தது. இந்த தகவலை கேட்ட உடனே விரைந்து மகேந்திர சிங் தோனி சந்தோஷுக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வர வைத்தார்.

ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு சந்தோஷ் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் சென்றார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அன்றைய நாளில் வானிலை மிக மோசமாக இருந்த காரணத்தினால் ஹெலிகாப்டரை வாரணாசியில் தரை இறக்க வேண்டி வந்தது. முடிஞ்சவரை அவருக்கு சிகிச்சை கொடுத்து நீண்ட நேரம் மருத்துவ குழு கவனமாக பார்த்துக் கொண்டார்கள். இருப்பினும் நேரம் செல்ல செல்ல சந்தோஷின் உயிர் இந்த உலகை விட்டுப் பிரிந்தது. அவரது உயிர் இந்த உலகை விட்டுப் பிரிந்த பொழுது அவருக்கு வயது 32.
தன்னுடைய உயிர் நண்பரை காப்பாற்ற முடியவில்லையே என்கிற துக்கம் இன்றும் மகேந்திர சிங் தோனி மனதில் ஆராத துக்கமாக இருக்கிறது.