தோனி உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்; சுனில் கவாஸ்கர் அட்வைஸ் !! 1

தோனி உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்; சுனில் கவாஸ்கர் அட்வைஸ்

தோனி தனது பழைய பார்மிற்கு திரும்ப உள்ளூர் போட்டிகளில் விளையாட வெண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் டி.20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த தொடரில் மொத்தம் 455 ரன்கள் குவித்தார்.

தோனி உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்; சுனில் கவாஸ்கர் அட்வைஸ் !! 2

ஐ.பி.எல் தொடரில் தோனியின் இந்த சிறப்பான ஆட்டம் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காகவும் தொடரும் என ஒவ்வொரு தொடரின் போதும் எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றம் மட்டுமே கிடைத்து வருகிறது.

தோனி உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்; சுனில் கவாஸ்கர் அட்வைஸ் !! 3

தோனி சமீபகாலமாக தொடர்ந்து சொதப்பி வருவதால் அவர் விரைவில் ஓய்வு பெற வேண்டும் என்றும் அவருக்கு பதிலாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாகவே ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில்,தோனி தனது பழைய பார்மிற்கு திரும்புவதற்கு உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தோனி உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்; சுனில் கவாஸ்கர் அட்வைஸ் !! 4

இது குறித்து கவாஸ்கர் கூறியதாவது, “இந்திய அணியில் தோனியின் பங்கு மிக முக்கியமானது. அவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை விளையாட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே வேளையில் தோனி தனது பழைய பார்மிற்கு திரும்ப வேண்டும். தோனி பழைய பார்மிற்கு விரைவில் திரும்புவதற்கு அவர் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டும். உள்ளூர் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாடும் பட்சத்தில் அது இளம் வீரர்களுக்கும் புதிய உத்வேகத்தையும் அனுபவத்தையும் கொடுக்கும்” என்றார்.

இந்திய அணியில் ரிஷப் பண்டிற்கு இடம் வேண்டும்;

2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாகவே ரிஷப் பண்டிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாஹிர் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜாஹிர் கான் கூறியதாவது;

உலக கோப்பைக்கு முன் இந்திய அணி சுமார் 25 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. எனவே இந்திய அணியில் ரிஷப் பண்ட்டை சேர்க்கலாம். உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பெறுவது அவருக்கு நல்ல படிப்பினையை கொடுக்கும் என ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக கோப்பையில் தோனி தான் ஆடுவார் என்றாலும் இந்திய அணியின் உலக கோப்பை ஓய்வறை ரிஷப் பண்ட்டிற்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள உதவும் என்பதே ஜாகீர் கானின் கருத்து.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *