இது கடைசி தொடர் இல்லை.... சென்னை ரசிகர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 1

தோனி இந்த வருட ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என முன்னாள் வீரரான தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வந்த தோனி சென்னை அணிக்காக 4 சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த பெருமைக்குரியவர். கடந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி, இந்த தொடரிலும் அதனை தக்க வைத்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் துவங்குவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தோனி சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும், ஜடேஜா சென்னை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவதாவும் அறிவிக்கப்பட்டது.

இது கடைசி தொடர் இல்லை.... சென்னை ரசிகர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 2

சென்னை அணியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டே தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக கூறப்பட்டிருந்தது. ஜடேஜா தலைமையில், நடப்பு தொடரில் 8 போட்டிகளை எதிர்கொண்ட சென்னை அணி, அதில் வெறும் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது, மற்ற போட்டிகளில் படுதோல்வி அடைந்தது. சென்னை அணியின் தொடர் தோல்வியை விட, நடப்பு தொடரில் சென்னை அணியில் ஜடேஜா உள்பட அனைத்து வீரர்களும் பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டது பெரும் விமர்ச்சனத்திற்கு உள்ளானது.

இது கடைசி தொடர் இல்லை.... சென்னை ரசிகர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 3

கடந்த காலங்கில் சென்னை அணியின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்த வந்த ஜடேஜா, நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாததோடு, பல கேட்ச்களையும் கோட்டைவிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கேப்டன்சி அழுத்தம் ஜடேஜாவின் தனிப்பட்ட ஆட்டத்தை வெகுவாக பாதித்துவிட்டது என கிரிக்கெட் வல்லுநர்கள் கவலை தெரிவித்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலகி கொள்வதாகவும், தோனியிடமே மீண்டும் கேப்டன் பதவி ஒப்படைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தோனியிடம் மீண்டும் கேப்டன் பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய முன்னாள் வீரரான தீப்தாஸ் குப்தா, தோனி அடுத்த வருட ஐபிஎல் தொடரிலும் விளையாட வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது கடைசி தொடர் இல்லை.... சென்னை ரசிகர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர் !! 4

இது குறித்து தீப்தாஸ் குப்தா பேசுகையில், “தோனி மீண்டும் கேப்டன் பதவிக்கு திரும்பிவிட்டதால் நடப்பு தொடரில் பல எதிர்பாராத சம்பவங்கள் நிச்சயம் நடக்கும். இனி சென்னை அணியை பற்றி கவலை கொள்ள தேவையில்லை, அனைத்தையும் தோனியே பார்த்து கொள்வார். தோனியிடம் மீண்டும் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டுள்ளதை சென்னை அணி பெரிய முடிவாக நான் பார்க்கிறேன், தோனியிடம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டுள்ளதன் மூலம் தோனிக்கு இந்த தொடர் கடைசி தொடர் இல்லை, அடுத்த தொடரிலும் அவர் விளையாடுவார் என்பது எனது பார்வையில் உறுதியாகிவிட்டது, சென்னை அணிக்கான அடுத்த கேப்டனை உருவாக்கி கொடுக்காமல் தோனி ஓய்வு பெற மாட்டார்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *