இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச அளவில் 499 போட்டிகள் ஆடியுள்ளார். இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டி20 போட்டி இவருக்கு 500வது சர்வதேச போட்டியாகும்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய அணிக்காக பல பெருமைகளை தேடி தந்துள்ளார். அவர் தலைமை பொறுப்பில் இருக்கும் பொழுது, 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ரோபி என அனைத்தையும் பெற்று தந்துள்ளார்.
இதுவரை 318 ஒருநாள் போட்டிகளும், 90டெஸ்ட் போட்டிகளும் மற்றும் 91 டி20 போட்டிகள் என மொத்தம் 499 சர்வதேச போட்டிகளை இந்திய அணிக்காக ஆடியுள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கினால் இது தோனிக்கு 500வது சர்வதேச போட்டியாகும்.
அதுமட்டுமில்லாமல் பல சாதனைகளையும் தன வசம் கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் பெஸ்ட் பினிஷர் என்ற படமும் இவருக்கு உண்டு. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றிருந்தாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து ஆடி வருகிறார்.
மேலும், இவர் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை வரை நிச்சயம் ஆட விடும் என தோனியின் ரசிகர்களும் சக அணி வீரர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், எல்லாம் அவர் கையில் தான் உள்ளது. ஏனெனில் எப்போது என்ன முடிவெடுப்பார் என்பது யாருக்கும் தெரியாது.