களத்தில் கால் பதித்தார் தல தோனி; அடுத்த தொடரில் விளையாடுவாரா..? 1

களத்தில் கால் பதித்தார் தல தோனி; அடுத்த தொடரில் விளையாடுவாரா..?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்காத முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணியின் அடுத்த தொடரான விண்டீஸ் தொடரிலும் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒதுங்கி இருந்து வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நம்பிக்கை விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி ராஞ்சியில் நேற்று வலைபயிற்சி ஈடுபட்டார்.

உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக இருந்தே தோனியின் பேட்டிங் ஃபார்மில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவந்தன. அவரின் ஆட்டத்தில் துடிப்பில்லை, சூழலுக்கு தகுந்தார்போல் பேட் செய்வதில்லை என்ற காட்டமான வசைகள் சமூகவலைதளங்களில் எழுந்தன.

களத்தில் கால் பதித்தார் தல தோனி; அடுத்த தொடரில் விளையாடுவாரா..? 2

முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், மஞ்சரேக்கர், சேவாக் ஆகியோரும் தோனியின் பேட்டிங் செய்யும் விதத்தைமாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால், உலகக் கோப்பைப் போட்டியில் தோனியின் பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆப்கானிஸ்தான், இங்கிலாந்துஅணிகளுக்கு எதிராக தோனியின் பேட்டிங் ரசிகர்களை வெறுப்பின் உச்சத்துக்கு தள்ளியது. இதனால், உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியஅணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில் தோனி ஓய்வு எடுக்கத் தொடங்கினார்.

ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி, மேற்கிந்தியத்தீவுகள் செல்லும் இந்திய அணியில் தனது பெயரை பரிசீலிக்கவேண்டாம் என தேர்வுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின் தென் ஆப்பிரிக்கத் தொடரிலும் தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவி்ல்லை.

களத்தில் கால் பதித்தார் தல தோனி; அடுத்த தொடரில் விளையாடுவாரா..? 3

நவம்பர் மாதம் வரை தன்னை அணியில் பரிசீலிக்க வேண்டாம் என்று தோனி தரப்பி்ல தேர்வுக்குழுவினரை கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடர் முடிந்தபின் மே.இ.தீவுகள் இந்தியா வந்து டி20 தொடர், ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது இந்த தொடரில் தோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

மேலும், தோனி ஓய்வு அறிவிப்பாரா என்ற செய்திகளும் சமூக வலைதளங்களில் வலம் வந்தன. ஆனால், அதுகுறித்து தேர்வுக்குழுவினர் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *