சென்னையை அணியின் கேப்டன் தோனியும், ருத்ராஜ் கெய்க்வாட்டும் தான் நான் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியாக இருந்தார்கள் என்று முகேஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் தீபக்சகருக்கு பதில் மாற்று வீரராக விளையாடிய முக்கிய சவுத்ரி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சென்னை அணியில் பிடித்துக் கொண்டார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் சௌத்திரி, முதல் இரண்டும் அல்லது மூன்று போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அதற்குப்பின் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.
சென்னை அணி வளர்த்துவிட்ட வீரர்களில் ருத்ராஜ் கெய்க்வாட்டிர்க்கு அடுத்து முக்கிய வீராரக பார்க்கப்படும் முகேஷ் சவுத்ரி சென்னை அணி குறித்தும் தோனி குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதுகுறித்து முகேஷ் சவுத்ரி பேசுகையில்,“நான் சென்னை அணியில் விளையாடுவேன் என்று ஒருபோதும் நினைத்து பார்த்ததே கிடையாது, நான் பஸ்ஸில் அமர்ந்த போது முதல் முறையாக தோனி என்னுடைய தோள்பட்டையில் தட்டிக்கொடுத்தார். அப்பொழுதுதான் நான் விளையாட போகிறேன் என்பது புரிந்தது, அந்த தருணம் எனக்கு பெருமையாக இருந்தது, ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் என்னால் என்னுடைய திறமையை வெளிப்படுத்த முடியவில்லை, இதனால் நான் எல்லா நாட்களிலும் தோனிடம் சென்று உரையாடுவேன், போட்டியின் நடுவிலும் அவரிடம் பேசிக் கொண்டே இருப்பேன், அப்பொழுது தோனி என்னிடம் கூறியதெல்லாம் உன்னுடைய திறமையின் மீது நீ நம்பிக்கை வைத்துக்கொள் என்பது மட்டுமே, மேலும் சென்னை அணியின் நட்சத்திர துவக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் என்னுடைய மிகச்சிறந்த நண்பர். எப்பொழுதுமே எனக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருப்பார், மேலும் உனக்கு எல்லா திறமையும் உள்ளது அதை நீ நம்பினாலே போதும், அனைவரும் இக்கட்டான நிலையை சந்தித்து தான் தீருவார்கள் என்று ருத்ராஜ் என்னிடம் பேசினார். பின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதன் மூலம் எனக்கு தன்னம்பிக்கை அதிகமானது என்றும் முகேஷ் சவுத்ரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.