என் பேச்சு கேட்டுதான் தோனி இந்த முக்கியாமன முடிவை எடுத்தார் ; மனம் திறந்த சுரேஷ் ரெய்னா..
என்னிடம் கேட்டுதான் தோனி அந்த முடிவை எடுத்தார் என சென்னை அணியில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவத்தை சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார் .
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பிறகு தமிழக ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட மிஸ்டர் ஐபிஎல் என்னும் பாராட்டை பெற்ற சுரேஷ் ரெய்னா, 2018-ஆம் ஆண்டு தோனி சர்வதேச போட்டியில் ஓய்வு அறிவித்த பொழுது அவருடன் சேர்ந்து தானும் ஓய்வு அறிவித்தார்.
இப்படி தோனியுடன் நல்ல நட்பில் இருந்த சுரேஷ் ரெய்னா, 2021 ஐபிஎல் தொடர் வரை சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக வலம்வந்தார்.பின் வயது முதிர்வு காரணமாகவும் மோசமான பார்ம் காரணமாகவும் 2021 ஐபிஎல் தொடரோடு ஒட்டுமொத்த கிரிக்கெட் தொடரிலும் ஓய்வை அறிவித்துவிட்டு கிரிக்கெட் வர்ணனை மற்றும் கிரிக்கெட் செய்திகள் குறித்தும் ஆக்டிவாகவும் பேசி வருகிறார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சின்ன தல சுரேஷ் ரெய்னா., பல்வேறு விதமான விஷயங்கள் குறித்து பேசும் பொழுது 2021 ஐபிஎல் தொடரில் ராபின் உத்தப்பாவை களமிறக்க சென்னை அணியின் கேப்டன் தோனி தன்னிடம் அனுமதி கேட்டதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா தெரிவித்ததாவது.,“நானும் சென்னை அணியின் கேப்டன் தோனியும் பேசிக்கொண்டிருந்தபோது,நான் இந்திய அணியின் அனுபவ வீரர் ராபின் உத்தப்பாவை சென்னை அணியில் விளையாட வைக்கலாம் என அறிவுரை கொடுத்தேன்.ராபின் உத்தப்பாவை கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் களமிறக்க தோனி என்னிடம் அனுமதி கோரினார்.நான் சரியான தேர்வு என்றும் நிச்சயம் ராபின் உத்தப்பா மீது நம்பிக்கை வைத்து அவரை விளையாட வைக்கலாம் என்று தெரிவித்தேன்.
“தோனி என்னிடம் 2008 முதல் நாம் சென்னை அணிக்காக விளையாடுகிறோம்.இந்த தொடர் நாம் எப்படியாவது வெற்றி பெற வேண்டும்,நீயே சொல் நாம் என்ன செய்யலாம் என்று கேட்டார். நான் ராபின் உத்தப்பாவை 3வது மேலும் அவரை எப்பொழுதும் ஆடும் லெவனில் இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள், அதில் வெற்றி கண்டால் சென்னை அணி வெற்றி பெற்றுவிடும் நான் விளையாடினாலும் ராபின் உத்தப்பா விளையாடினாலும் இரண்டுமே ஒன்றுதான் என்று நான் கூறினேன்” என தோனியுடன் நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயம் குறித்து சுரேஷ் ரெய்னா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.