இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டியில் ஜசன் ராயின் விக்கெட்டிற்கு ரிவ்யூ எடுக்காமல் விட்ட தோனியை ட்விட்டரில் ரசிகர்கள் கிண்டல் அடித்துள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரின் 38 வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் மோதி வருகின்றனர். பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
கட்டை விரலில் காயம் ஏற்பட்டு சில போட்டிகளில் ஓய்வு பெற்று வந்த துவக்க வீரர் ஜேசன் ராய் இன்றைய போட்டியில் களமிறங்கினார். அதேபோல இவருக்கு மறுபக்கம் ஜானி பேர்ஸ்டோ துவக்கம் கொடுத்தார். இருவரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை மிகச் சிறப்பாக ஆடி அணிக்கு ரன் சேர்த்தனர்.
முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்களை இந்த ஜோடி சேர்த்தது. 11-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். 10.5 ஓவரில் பாண்டியா பந்தில் ஜேசன் ராய் இன் கிளவுஸில் பட்டு தோனி அதை கேட்ச் பிடித்தார். இதற்கு இந்திய அணி வீரர்கள் அவுட் என அப்பீல் செய்ததில், கள நடுவர் அதை அவுட் இல்லை என மறுத்து விட்டார். ரிவியூ போகலாம் என ஹர்திக் பாண்டியா கேட்டதற்கு அதனை தோனி மறுத்துவிட்டார்.
ஆனால் ரீப்ளேயில் பார்க்கையில் ஜேசன் ராய் க்ளவுஸில் பந்து படுத்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. இதற்கு தோனி ஏன் ரிவ்யூ போக வேண்டாம் என்று கூறினார் என்பது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
டோனி எடுக்கும் ரிவியூ பெரும்பாலும் சரியாக இருக்கும் என்பதால், DRS என்பதை Dhoni Review System என ரசிகர்கள் செல்லமாக அழைப்பர். இன்று அனைவரும் அவுட் என கூறுகையில் தோனி வேண்டாம் என கூறியதை ட்விட்டரில் ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர்.
ட்விட்டர் பதிவுகள் சில:
Dhoni review system ?
Come on #AleemDar , if u decides like this how can ur @TheRealPCB gets chance of semi's ??#TeamIndia #CWC19#BleedOrange #ENGvIND #MSDhoni #ViratKohli pic.twitter.com/5jlwfRJXNs— Mithun Talwar (@MithunTalwar) June 30, 2019
https://twitter.com/Surjith_SRT/status/1145286060114472960?s=19
ஆனா தப்பு பண்ணது pantஆ இருந்தா நீங்க இவ்ளோ தூரம் வந்து quote பணணிருக்க மாட்டிங்கன்றது வேற விசயம்.. ? Brw, Dhoni review systemனு சொன்னதால 100% success ratio எதிர்பாக்குறிங்க போல.. சிறப்பு.. ம்ம்
— DON ஸ்டைல் பாண்டி (@i_StylePaandi) June 30, 2019
@BCCI Wr is dhoni review system now pic.twitter.com/4FFzuAj22W
— ganesh (@ganeshkom) June 30, 2019
https://twitter.com/itismurugan/status/1145282737084854272?s=19
https://twitter.com/Mambattiyan_/status/1145280145210540032?s=19
When stupid fans celebrate only1 good catch but closes their eyes when he does lot of mistakes behinds the stumps & when Dhoni review system fails (it’s fail). pic.twitter.com/Oj4NqXu5R7
— Prashant Sarnaik (@PrashantSirnaik) June 30, 2019