இவனுகள வச்சிக்கிட்ட தோனி என்ன செய்யப்போறாரோ..? புலம்பும் பயிற்சியாளர் !! 1

இவனுகள வச்சிக்கிட்ட தோனி என்ன செய்யப்போறாரோ..? புலம்பும் பயிற்சியாளர்

இந்த ஐ.பி.எல் தொடரானது, அணித்தேர்வு விஷயத்தில் தோனிக்கு பெரும் சவாலாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை துவங்கும் ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல் தொடரின் 12 சீசன்கள் இதுவரை நிறைவடைந்துள்ள நிலையில், 13வது சீசன் இன்று துவங்குகிறது.

இவனுகள வச்சிக்கிட்ட தோனி என்ன செய்யப்போறாரோ..? புலம்பும் பயிற்சியாளர் !! 2

துபாயில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத உள்ளது.

சமபலம் கொண்ட இரு அணிகள் மோத உள்ள இன்றைய போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்த தொடர் குறித்தும் இன்றைய போட்டி குறித்தும் தங்களது கருத்துக்களை ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரும், பீல்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர், பீல்டிங்கில் நிச்சயம் சென்னை அணி சொதப்பும் என தெரிவித்துள்ளார்.

இவனுகள வச்சிக்கிட்ட தோனி என்ன செய்யப்போறாரோ..? புலம்பும் பயிற்சியாளர் !! 3

இது குறித்து சஞ்சய் பங்கர் கூறுகையில், “தோனி கிரிக்கெட்டில் மிகுந்து அனுபவம் மிக்க சிறந்த வீரர். சென்னை அணியின் மற்ற வீரர்களும் சீனியர்களாகவே இருப்பதால் களத்தில் அவர்களுடன் தோனி அனுசரித்து போக வேண்டிய கட்டாயம் ஏற்படும். தோனி அவர்களை எவ்வாறு கையாளுகிறார் என்பதை பார்க்க ஆவலுடன் உள்ளேன். பேட்டிங், பந்துவீச்சில் சென்னை அணிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது, ஆனால் பீல்டிங் சென்னை அணிக்கு மிகப்பெரும் பிரச்சனையாக இருக்கும். டி.20 போட்டிகள் பரபரப்பாக இருக்கும் என்பதால் சீனியர் வீரர்கள் அதிகமாக உள்ள சென்னை அணி எப்படி செயல்படும் என்பதை பார்க்க காத்துள்ளேன்.பீல்டிங் பிரச்சனை தோனிக்கும் கடும் நெருக்கடியை கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *