தோனி மட்டும் இருந்திருந்தா சூப்பர் ஓவரில் இது நடந்திருக்காது; சேவாக் திட்டவட்டம் !! 1

தோனி மட்டும் இருந்திருந்தா சூப்பர் ஓவரில் இது நடந்திருக்காது; சேவாக் திட்டவட்டம்

தோனி மட்டும் கேப்டன் கோலி இடத்தில் இருந்திருந்தால் நிச்சயமாக சூப்பர் ஓவரை பும்ராவுக்கு வழங்கியிருக்க மாட்டார் என முன்னாள் அதிரடி மன்னன் சேவாக் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று டி-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று. நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி-20 தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இரு அணிகள் மோதும் நான்காவது டி-20 போட்டி நாளை வெலிங்டனில் நடக்கிறது.

இந்நிலையில் இப்போட்டியில் பும்ரா பவுலிங் செய்த 4 ஓவரில் 45 ரன்களை வாரி வழங்கினார். இருந்தாலும் போட்டி டை ஆன பின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் தீவிர ஆலோசனை செய்த கேப்டன் விராட் கோலி, யார்க்கர் கிங் பும்ராவிடம் பந்தை கொடுத்தார். ஆனால் அந்த சூப்பர் ஓவரிலும் பும்ரா பந்துவீச்சை கப்டில், கேப்டன் வில்லியம்சன் சிதறடித்து 17 ரன்கள் விளாசினர்.

தோனி மட்டும் இருந்திருந்தா சூப்பர் ஓவரில் இது நடந்திருக்காது; சேவாக் திட்டவட்டம் !! 2
HAMILTON, NEW ZEALAND – JANUARY 29: Mohammed Shami of India celebrates bowling Ross Taylor of New Zealand during game three of the Twenty20 series between New Zealand and India at Seddon Park on January 29, 2020 in Hamilton, New Zealand. (Photo by Phil Walter/Getty Images)

ஆனால் முன்னதாக போட்டியின் கடைசி ஓவரை இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகம்மது ஷமி அசத்தலாக வீசி போட்டியை டை செய்த கைகொடுத்தார். மேலும் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷமி வெறும் 8 ரன்கள் மட்டும் கொடுத்தார். இதனால் ஷமி நட்சத்திர நாயகனாக ஜொலித்தார். ஷமி இப்படி சிறப்பாக பவுலிங் செய்த போதும், கடைசி ஓவரை கேப்டன் கோலி பும்ராவுக்கு வழங்கிய காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தோனி மட்டும் கோலி இடத்தில் இருந்தால் கண்டிப்பாக சூப்பர் ஓவரை பும்ராவுக்கு வழங்கியிருக்கமாட்டார் என முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேவாக் கூறுகையில்,“ என்னால் இதை நிச்சயமாக சொல்ல முடியும். தோனி கேப்டனாக இருந்திருந்தால் நிச்சயமாக பும்ராவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க மாட்டார். ஏன் என்றால் பும்ராவுக்கு நேற்று சரியான நாளாக அமையவில்லை.

தோனி மட்டும் இருந்திருந்தா சூப்பர் ஓவரில் இது நடந்திருக்காது; சேவாக் திட்டவட்டம் !! 3

பும்ரா சிறந்த பவுலர் என்றாலும் அன்று சிறந்த நாள் இல்லை என பும்ராவுக்கே தெரியும். அவருக்கு பதிலாக யுஸ்வேந்திர சஹால், அல்லது ரவிந்திர ஜடேஜா சிறந்த தேர்வாக இருந்திருப்பார்கள். தோனி மட்டும் கேப்டனாக இருந்திருந்தால் ரவிந்திர ஜடேஜாவை தான் தேர்வு செய்திருப்பார். பும்ராவுக்கு பதில் ரவிந்திர ஜடேஜா பவுலிங் செய்திருந்தால் அவர் 17 ரன்கள் வழங்கியிருக்கமாட்டார். வெறும் 6 ரன் மட்டுமே கொடுத்திருப்பார்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *