நான் இங்க வந்து இத மட்டும் தான் சாதித்தேன் – ஜம்பா மகிழ்ச்சி

தோனியை அவுட்டாக்கியது சிறப்பான ஒன்று என ஆஸ்திரேலியா ஸ்பின்னர் ஆடம் ஜம்பா தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி20 போட்டியில் விளையாடியது. இதில் இந்திய அணி 4-1 என ஒருநாள் போட்டியை வென்றது. 3வது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டதையடுத்து, போட்டி 1-1 என போட்டி சமநிலையில் முடிந்தது.

ஜம்பா உற்சாகம் :

2வது டி20 போட்டியின் போது, இந்திய அணி வெற்றிக்கு போராடிய முக்கிய கட்டத்தில் தோனியை, ஆஸி ஸ்பின்னர் ஆடம் ஜம்பா அவுட்டாக்கினார்.

ஜம்பா வீசிய பந்து, தோனியின் பேட்டில் பட்டு கீப்பர் டிம் பெய்ன் கேட்ச் பிடித்தார். அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சி மிக அலாதியானது. இதுவரை நான் பல போட்டிகளில், பல வீரர்களின் விக்கெட் வீழ்த்தியுள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் ஏற்படாத ஒரு மகிழ்ச்சி, தோனியின் விக்கெட் வீழ்த்தியதில் கிடைத்தது.

பயந்துவிட்டேன் :

போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் எங்கள் அணி வந்துகொண்டிருந்த போது, எங்கள் பேருந்து யாரோ சிலரால் தாக்கப்பட்டது. நான் பாட்டு கேட்டுக்கொண்டே வந்துகொண்டிருந்தேன். அப்போது திடீரென எங்கள் பேருந்தில் ஏற்பட்ட சப்தம் கேட்டு சிறிது பயந்துவிட்டேன். என ஜம்பா தெரிவித்துள்ளார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.